Paristamil Navigation Paristamil advert login

பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்! - பரிசில் 80 பேருக்கு குற்றப்பணம்!!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்! - பரிசில் 80 பேருக்கு குற்றப்பணம்!!

28 ஐப்பசி 2023 சனி 14:44 | பார்வைகள் : 4921


பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பரிசில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 80 பேருக்கு குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை பிற்பகலின் பின்னர் Place du Châtelet பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினார்கள். பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். பரிஸ் காவல்துறையினரால் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையினை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவர்களில் 80 பேருக்கு குற்றப்பணம் அறவிட்டனர்.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டம் Place du Châtelet சதுக்கத்தில் இருந்து Place de la République சதுக்கம் வரை இடம்பெற தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்கு காவல்துறையினர் தடை விதிக்கவே, அவர்கள் Place du Châtelet பகுதியில் ஒன்று கூடினார்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்