Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல்-ஹமாஸ் : பிரெஞ்சு மக்களின் ஆதரவு யாருக்கு? - கருத்துக்கணிப்பு!!

இஸ்ரேல்-ஹமாஸ் : பிரெஞ்சு மக்களின் ஆதரவு யாருக்கு? - கருத்துக்கணிப்பு!!

28 ஐப்பசி 2023 சனி 15:50 | பார்வைகள் : 8280


இஸ்ரேல் ஹமாஸ் தரப்பினரிடையே யுத்தம் இடம்பெற்று வருகிறது. இந்த யுத்தத்தில் பிரெஞ்சு மக்களின் ஆதரவு நிலைப்பாடு குறித்து கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் பிரான்சில் வசிக்கும் பத்தில் ஏழு பேர் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர். யூதர்களின் நிலத்தில் இருந்து ஹமாஸ் அமைப்பினரை வெளியேற்ற வேண்டும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

43% சதவீதமானவர்கள் இஸ்ரேல் மீது அனுதாபம் கொள்வதாகவும், 20% சதவீனமானோர் பாலஸ்தீனம் மீது அனுதாபம் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியது போல் பிரான்சிலும் தாக்குதல் நடத்துவார்கள் என அச்சப்படுவதாக பத்தில் எட்டுப் பேர் தெரிவித்துள்ளனர்.

[இந்த கருத்துக்கணிப்பை Ifop நிறுவனம் மேற்கொண்டுள்ளது]

வர்த்தக‌ விளம்பரங்கள்