Paristamil Navigation Paristamil advert login

மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கு (voiture électrique) அரசு 200 மில்லியன் Eurosகளை வழங்குகிறது.

மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கு (voiture électrique) அரசு 200 மில்லியன் Eurosகளை வழங்குகிறது.

28 ஐப்பசி 2023 சனி 15:52 | பார்வைகள் : 9333


இன்று மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்களின் அளவை அதிகப்படுத்த பிரான்ஸ் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறித்த வாகனங்களை வாங்கும் போது அரசு விசேட குடுப்பனவும் வழங்குகிறது. இருப்பினும்    voiture électrique வாகனங்களை கொள்வனவு செய்யும்  வீதத்தில் மந்தமான நிலையே தொடர்கின்றது.

காரணம் மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்களின் மின்கலன்களை வேகமாக நிரப்பும் நிலையங்கள் மிகக் குறைவாகவே உள்ளது. எனவே அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கிய நிதியை விடவும் மேலும் அதிகமாக 200 மில்லியன் Eurosகளை புதிய மின்கலன்களை நிரப்பும் நிலையங்களை உருவாக்க வழங்கியுள்ளது.

2030ம் ஆண்டில் பிரான்ஸ் முழுவதும் 400 000 மின்கலன் நிரப்பும் நிலையங்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் நெதர்லாந்துக்குப் பின்னால் இரண்டாம் இடத்தில் பிரான்ஸ் இருக்கும் என நம்பப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்