மேலும் 9 பேர் நாடு கடத்தல்! - உள்துறை அமைச்சர் அறிவிப்பு!
.jpg)
28 ஐப்பசி 2023 சனி 20:30 | பார்வைகள் : 9176
கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரான்சில் இருந்து 21 பேர் நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மேலும் ஒன்பது பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
உள்துறை அமைச்சர் Gérald Darmanin இதனை அறிவித்துள்ளார். பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒன்பது வெளிநாட்டவர்களே பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 19 தொடக்கம் 45 வரையான வயதுடைய 9 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள், கொள்ளை, தாக்குதல்கால், கொலை மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதோடு, அவர்களில் இதுவர் மதவாத அச்சுறுத்தல் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.