ஆரியன், திராவிடன் என்ற கருத்துக்கு சரியான இடம் குப்பை தொட்டி தான்! : அண்ணாமலை
26 ஐப்பசி 2023 வியாழன் 12:40 | பார்வைகள் : 2948
ஆரியன், திராவிடன் என்ற கருத்து குப்பை; அதற்கு சரியான இடம் குப்பைத் தொட்டியாகத் தான் இருக்க வேண்டும், என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 1967ம் ஆண்டு முதல், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், சுதந்திரப் போராட்டத்துக்கு பாடுபட்ட பல முக்கிய தலைவர்கள், ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப்பட்டு, ஜாதி முத்திரை குத்தப்பட்டுள்ளனர்
அருகதை இல்லை
தமிழக கவர்னர் ரவி இவ்வாறு சொன்னதில், எவ்வித தவறும் கிடையாது. எத்தனை சுதந்திர போராட்ட வீரர்களை, தமிழக பாடப்புத்தகத்தில் இடம் பெற செய்துள்ளனர்?
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்களது பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அலங்கார வளைவுகளுக்கும் கூட, தி.மு.க., தலைவர்களின் பெயர்களை தான் வைத்து வருகின்றனர்.

மக்கள் வரிப் பணத்தில் நினைவு மண்டபம் கட்டுவது பெரிதல்ல. கவர்னரை முழு நேரமாக ஒருமையில் திட்டுவதையே வேலையாக வைத்திருக்கின்றனர், டி.ஆர்.பாலு மற்றும் தி.மு.க.,வினர். இதை இவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பாரதியாரை பற்றி பேச, தி.மு.க., தலைவர்களுக்கு அருகதை இல்லை. பல ஆண்டுகளாக பாரதியார் கவிதைகளை, தி.மு.க.,வினர் ஏற்றுக் கொள்ளவில்லை.
பாரதியாரை மக்கள் மறக்கவில்லை என்பதை அறிந்த தி.மு.க.,வினர், அவரது இல்லத்தை அரசுடைமையாக்கினர்.

வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த வீடு, பெட்டிக்கடை போன்று சின்ன அறையை நினைவுச்சின்னம் ஆக்கியுள்ளனர். இந்த, 'டிராமா'வை முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

'நீட்' வேண்டாம் என்று சொன்னால், அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று, சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். கையெழுத்து வாங்குவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.
ஒன்றரை கோடி உறுப்பினர்களை வைத்துக்கொண்டு, 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்குவதில் பயனில்லை.
முதல் குற்றவாளி
தி.மு.க., இதை ஒரு நாடகமாகவே நடத்துகிறது. 2016 முதல் எட்டு ஆண்டுகள் 'ரிசல்ட்' உள்ளது. அலசி ஆராய்ந்தாலே, மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பது புரியும்; சாதாரண மக்கள் பயனடைந்துள்ளனர்.
நீட் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்று, இரண்டு ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறேன்; தரவில்லை.
நீட் தேர்வுகள் நடக்கும் தற்கொலைக்கு துாண்டியதாக, முதல் குற்றவாளியாக ஸ்டாலின், அடுத்த குற்றவாளியாக உதயநிதி இருக்க வேண்டும். நேர்மையான காவல் துறையாக இருந்தால் இதை செய்திருக்கும்.
இந்த தேர்தலில் நீட்டை மையமாக வைத்து தேர்தலை சந்திக்க தி.மு.க., தயாரா? நாங்கள் தயார்!
முட்டையை வைத்து உதயநிதி என்ன சொல்ல வருகிறார்?
தி.மு.க.,வில் முன்னேற அறிவு கிடையாது; ஜீரோ அறிவு இருந்தால், முன்னேறி விடலாம் என முட்டையை வைத்துக் காட்டுகிறாரா?
இன்னும் சிறுபிள்ளைத்தனமாக அரசியல் நடத்தி வருகிறார் உதயநிதி. ஆரியன், திராவிடன் என்ற ஒரு கருத்து, குப்பை. அதற்கு சரியான இடம் என்பது குப்பைத்தொட்டி.
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் சேர்பவர்களின் எண்ணிக்கை, இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு, முதல்வர் ஸ்டாலின் பெரும் சேவை செய்ய விரும்பினால், நான் என்ன செய்வது?
அனைவருக்குமான தலைவன் நான். அனைவருக்குமான கட்சி பா.ஜ., தாஜா பண்ணும் அரசியல் வேண்டாம் என சிறுபான்மையினர் முடிவு செய்துள்ளனர். எனவே, பா.ஜ.,வில் சேர்கின்றனர்.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
சிரிப்பு தான் பதில்
அ.தி.மு.க.,வின் பழனிசாமி தான் அடுத்த பிரதமர் என, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, அண்ணாமலை சிரித்து விட்டு, ''சிரிப்பு தான் என் பதில்,'' என்றார்.