Google இல் களைகட்டும் தீபாவளி... இப்படி எல்லாமா செய்வாங்க?
26 ஐப்பசி 2023 வியாழன் 08:51 | பார்வைகள் : 2342
2023 ஆம் ஆண்டிற்கான தீபாவளியானது வருகின்ற நவம்பர் மாதம் 12 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
வழக்கமாக தனது தேடல் பக்கத்தில் பிரத்யேக டூடுல்களுடன் பண்டிகைகளைக் கொண்டாடும் கூகுள், இந்த முறை விளக்குகளின் திருவிழாவை சற்று வித்தியாசமாக நடத்தத் தேர்வு செய்துள்ளது.
Google.com க்குச் செல்லவும்.
தேடல் பட்டியில், "தீபாவளி" என்று பார்க்கவும்.
திரையின் மேல் இடதுபுறத்தில், தேடல் பட்டியின் கீழே, தீபாவளி விளக்கு இருக்கும்.
அதை க்ளிக் செய்யவும்.
நீங்கள் அதைச் செய்தவுடன், திரை சற்று இருட்டாகிவிடும், அதில் விளக்குகள் தோன்றும்.
அதை மவுஸ் பாயிண்டருக்கு வைத்து ஒவ்வொரு விளக்காக எரிய வைக்க வேண்டும்.
நீங்கள் அனைத்து விளக்குகளையும் ஒளிரச் செய்தவுடன், திரை சிறிய நட்சத்திரங்களால் நிரப்பப்படும்.
இதே எஃபெக்ட் கணினி மட்டுமின்றி கூகுள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். வெர்ஷன்களிலும் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.