Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல்  நடத்திய தாக்குதலை கண்டிக்கும் துருக்கி ஜனாதிபதி

இஸ்ரேல்  நடத்திய தாக்குதலை கண்டிக்கும் துருக்கி ஜனாதிபதி

26 ஐப்பசி 2023 வியாழன் 09:03 | பார்வைகள் : 3042


காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை கண்டித்த துருக்கி ஜனாதிபதி எர்டோகன், ஹமாஸ் தாயகத்தை பாதுகாக்கும் போராளிகள் குழு என குறிப்பிட்டார்.

ஹமாஸ் அமைப்பை பயங்கரவாதிகள் என இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.

இரு தரப்பு மோதலிலும் பலியானோர் எண்ணிக்கை இதுவரை 7,000ஐ தாண்டியுள்ளது. 

3 வது வாரமாக நீடித்து வரும் இந்தப் போரில், காஸாவுக்குள் புகுந்து இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. 

இஸ்ரேலை கண்டித்துள்ள துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஹமாஸ் போராளிகள் அமைப்பு என கூறியுள்ளார்.

ஏற்கனவே போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த எர்டோகன், தனது கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இஸ்ரேலை மீண்டும் ஒருமுறை கண்டித்தார்.

அவர் பேசும்போது, 'இஸ்ரேலிய மக்களுடன் துருக்கிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. 

ஹமாஸ் ஒரு பயங்கரவாதக் குழு அல்ல.

ஆனால் தாயகத்தைப் பாதுகாக்கும் போராளிகளின் குழு. 

இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்' என தெரிவித்தார்.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்