Paristamil Navigation Paristamil advert login

'துருவ நட்சத்திரம்' வெளியாவதில் சிக்கலா?

'துருவ நட்சத்திரம்' வெளியாவதில் சிக்கலா?

26 ஐப்பசி 2023 வியாழன் 09:06 | பார்வைகள் : 4500


கவுதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், விக்ரம், ரித்து வர்மா, பார்த்திபன், சிம்ரன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. கடந்த ஐந்து வருடங்களாக பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் தயாரான இந்தப் படம் ஒரு வழியாக நவம்பர் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யு டியுப் தளத்தில் 95 லட்சம் பார்வைகளை இதுவரை பெற்றுள்ளது.

இதனிடையே, நவம்பர் 24ம் தேதி இப்படம் திட்டமிட்ட வெளியாகுமா என்ற சந்தேகம் திரையுலகில் எழுந்துள்ளது. இப்படத்தைத் தயாரித்த வகையில் கவுதம் மேனன் சுமார் முப்பது கோடி வரையில் கடன் பெற்றுள்ளாராம். அவற்றை அடைத்தால் மட்டுமே படம் வெளியாகும் என்கிறார்கள். படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படவில்லையாம். கவுதம் கேட்கும் விலைக்கு எந்த ஓடிடி நிறுவனமும் வாங்கத் தயாராக இல்லையாம். இருப்பினும் அடுத்த சில நாட்களில் அதுவும் முடிந்துவிடும் என்கிறார்கள்.

அந்தத் தொகையை வைத்தே கடனை அடைத்து கவுதம் மேனன் எப்படியும் படத்தை வெளியிட்டுவிடுவார் என்றும் நம்புகிறார்களாம். நீண்ட காலம் காத்திருக்கும் படம், டிரைலருக்கும் நல்ல வரவேற்பு, எனவே, படத்தை சிக்கலில்லாமல் வெளியிட்டால் நல்ல வசூலைப் பெறும் என கோலிவுட்டில் சொல்கிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்