மன்னர் சார்லசின் எஸ்டேட்டுக்குள் ஒரு பிரமிடு
26 ஐப்பசி 2023 வியாழன் 09:15 | பார்வைகள் : 4122
பிரித்தானியாவில், அதுவும் மன்னர் சார்லசின் எஸ்டேட் ஒன்றிலேயே ஒரு பிரமிடு அமைக்கப்பட்டுள்ளது.
மன்னர் சார்லசுக்கு சொந்தமான பால்மோரல் எஸ்டேட்டில் ஒரு பிரமிடு உள்ளது.
ஆனால், அதற்கும் எகிப்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அந்த பிரமிடு, Prince Albert’s Cairn என அழைக்கப்படுகிறது. Cairn என்ற வார்த்தையின் பொருள், கற்குவியலால் அமைக்கப்பட்ட அடையாளச் சின்னம் என்பதாகும்.
இந்த பிரமிடை இன்னொரு தாஜ்மஹால் என்று கூட அழைக்கலாம்.
அது விக்டோரியா மகாராணியார் தன் காதல் கணவருக்காக கட்டிய பிரமிடு ஆகும்.
1861ஆம் ஆண்டு, விக்டோரியா மகாராணியாரின் கணவரான இளவரசர் ஆல்பர்ட் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, தனது 42ஆவது வயதிலேயே மரணமடைந்துவிட்டார்.
விக்டோரியா, தன் கணவருக்காக 1862ஆம் ஆண்டு இந்த பிரமிடைக் கட்டினார்.
41 அடி உயரமும், தரைமட்டத்தில் 41 அடி அகலமும் கொண்டதாகும் இந்த பிரமிட்.
அந்த பிரமிடில், இந்த பிரமிடு, 1862ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 1ஆம் திகதி, அன்பிற்குரிய இளவரசர் ஆல்பர்ட்டுக்காக அவரது மனமுடைந்த மனைவி விக்டோரியா கட்டி எழுப்பியது என்னும் எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
தன் கணவர் மீது அளவிலாக் காதல் கொண்ட விக்டோரியா, தன் கணவர் இறந்த பின், தான் ஆட்சி செய்த காலம் முழுவதும், துக்கத்தின் அடையாளமாக கருப்பு உடை மட்டுமே அணிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.