பிரதமர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்! - மீண்டும் வாக்கெடுப்பு!
26 ஐப்பசி 2023 வியாழன் 09:30 | பார்வைகள் : 6909
பிரதமர் Elisabeth Borne நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் சமூக பாதுகாப்புக்கான வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்றியிருந்தார். வாக்கெடுப்பு ஒன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த வரவுசெலவுத் திட்டத்தினை அடுத்து, மக்ரோனின் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி இந்த சட்டத்தை அவர் நிறைவேற்றியிருந்தார். அதையடுத்து La France insoumise கட்சியும், மரீன் லு பென்னின் Rassemblement national கட்சியினரும் மக்ரோனின் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்குரிய பிரேரணை கொண்டுவந்தனர்.
இந்த நம்பிக்கை இல்லா பிரேரணை மீது இன்று நள்ளிரவு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
***
பிரதமர் Élisabeth Borne இதுவரை 14 தடவைகள் இந்த 49.3 அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தியுள்ளார்.