Seine-et-Marne : துப்பாக்கிச்சூட்டில் மூன்று மாத குழந்தை பலி!
 
                    26 ஐப்பசி 2023 வியாழன் 10:57 | பார்வைகள் : 12407
மூன்று மாத கைக்குழந்தை ஒன்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளது. இச்சம்பவம் Seine-et-Marne நகரில் இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள Fontainebleau மருத்துவமனைக்கு தந்தை ஒருவர் காயமடைந்த கைக்குழந்தை ஒன்றை எடுத்துக்கொண்டு அவசரமாக வருகை தந்துள்ளார். குழந்தை நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், அவசர சிகிச்சைக்கு உட்படுதப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை சில நிமிடங்களில் உயிரிழந்தது.
சம்பவம் தொடர்பில் குறித்த குழந்தையின் 54 வயதுடைய தந்தை தெரிவிக்கையில், வேலையில் இருந்து வீட்டுக்கு திரும்பும் போது குழந்தை காயமடைந்து கிடந்ததாகவும், அவரது தாயார் வீட்டில் இருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், முதல்கட்டமாக அவரைக் கைது செய்ததுடன், சில மணிநேரம் கழித்து அவரது மனைவியை Milly-la-Forêt பகுதியில் காயமடைந்த நிலையில் கைது செய்துள்ளனர்.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்
        Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan