Paristamil Navigation Paristamil advert login

புதிய காதலரை அறிமுகப்படுத்திய அமலாபால்..

புதிய காதலரை அறிமுகப்படுத்திய அமலாபால்..

26 ஐப்பசி 2023 வியாழன் 12:23 | பார்வைகள் : 7162


நடிகை அமலாபால் தனது 32வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், தனது புதிய காதலரை அறிமுகப்படுத்தி உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீலத்தாமரா எனும் மலையாள படத்தில் அறிமுகமான அமலாபால் தமிழில் சிந்து சமவெளி படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார்.

ஆனால், அந்த படம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அமலாபாலுக்கு விதார்த் உடன் இணைந்து நடித்த மைனா படம் தான் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

முன்னணி ஹீரோயினாக வலம் வந்த அமலாபால் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கிய தெய்வத் திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

ஆடை படத்தில் ஆடையே அணியாமல் அதிகப்படியான காட்சிகளில் நடித்து பகீர் கிளப்பிய அமலாபால் படத்தை இனிமேல் தமிழ் சினிமா ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து பார்க்க மாட்டார்கள் என முத்திரை குத்தப் பட்ட நிலையில், அதிரடியாக பல படங்களில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும், வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்த அமலா பாலுக்கும் தனுஷுக்கும் இடையே நெருக்கம் என கிசுகிசு கிளம்பிய நிலையில், வெடித்த சர்ச்சை காரணமாக ஏ.எல். விஜய்யை விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன் பின்னர் மும்பையில் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டதாக புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், அவரை திருமணம் செய்யவில்லை என்றும் தன்னை ஏமாற்றி விட்டார் என்றும் அவர் மீது வழக்கு தொடர்ந்து அந்த புகைப்படங்களை நீக்கினார் அமலாபால்.

கோயில் கோயிலாக சென்று ஆன்மிகவாதியாக மாறப்போகிறார் என நினைத்த நிலையில், தன்னுடன் டூர் அடித்து வந்த ஜகத் தேசாய் என்பவரை காதலித்து வந்த அமலாபால் அவர் தன்னை ப்ரோபோஸ் பண்ண வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்