Paristamil Navigation Paristamil advert login

விதியை மீறிய பூர்ணிமாவின் தலைவர் பதவி பறிபோகுமா?

விதியை மீறிய பூர்ணிமாவின் தலைவர் பதவி பறிபோகுமா?

26 ஐப்பசி 2023 வியாழன் 12:27 | பார்வைகள் : 2036


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் எதிர்பாராத பல சண்டை சச்சரவுகளுக்கு இடையே பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. கூடுதலாக இரண்டு காதல் ஜோடியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பது மிக பெரிய பிளஸ் என கூறலாம். 

18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை, 3 பேர் எலிமினேட் ஆகி வெளியேறியுள்ள நிலையில், இந்த வாரம் யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 

இது ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் சில குதர்க்கமான டாஸ்குகளை கொடுத்து... சும்மா இருக்கும் போட்டியாளர்களை கூட படு ஹாட்டாக சண்டை போடா வைக்கிறார். நேற்றைய தினம், விசித்ராவுக்கு கொடுத்த டாஸ்கால் மாயா மற்றும் விசித்திரா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பின்னர் அமைதியாகினர்.

அதே போல் காதல் ஜோடியாக சுற்றி கொண்டிருந்த, மணி - ரவீனா குள்ளும் நேற்றைய தினம் சண்டையை மூட்டும் வகையில் ஒரு சம்பவத்தை சிறப்பாக செய்தார் பிக்பாஸ். ஆனால் ரவீனா மிகவும் நியாயமாக விளையாடியதாகவும், சுயமாக சிந்தித்து விளையாடும் ரவீனாவை மணி கண்ட்ரோல் செய்கிறார் என பல நெட்டிசன்கள் கூறினர்.

இதை தொடர்ந்து, இன்றைய தினம் ஏற்கனவே வெளியான புரோமோவில் பிரதீப் மற்றும் ஜோவிகா இடையே ஏற்பட்ட ஒரு வலுவான விவாதத்தை பார்க்க முடிந்தது.இதை தொடர்ந்து, பிக்பாஸ் விதிமுறையை மீறும் விதத்தில், பூர்ணிமா நடந்து கொண்டதால், அவரின் கேப்டன்சிகே கிடைத்த கேப்பில் ஆப்பு வைத்துள்ளார் பிரதீப்.

பிக்பாஸ் மேக்கப் பொருட்களை உபயோகிக்க கூடாது என கூறியுள்ள நிலையில், அதை மீறும் விதமாக... பூர்ணிமா நெய்யை லிப்ஸ்டிக்காக பயன்படுத்தி தன்னை அலங்கரித்து கொண்டிருப்பதை கவனித்து பிக்பாஸ் கண்டிக்கிறார்.  பூர்ணிமா செய்ததை மற்ற போட்டியாளர்கள் FUN-ஆக பார்த்தாலும், பிரதீப் திடீர் என கோபமாகி நீ உன் மேக்கப்பை தியாகம் செய்ய முடியாது என்றால், நாங்கள் மட்டும் ஏன் எங்கள் பசியை தியாக செய்யணும். நீ இப்படி செஞ்சதுக்கு இந்த வாரம் வாயவே திறக்க கூடாது, இல்லை கேப்டன்சியை தியாகம் செய்ய வேண்டும் என கூறுகிறார். இதற்க்கு பூர்ணிமா கேப்டன்சியை விட்டு கொடுக்க மாட்டேன் என கறாராக கூறினாலும், இதற்க்கு தண்டனை பிக்பாஸ்ஸிடம் இருந்து கிடைக்குமா? அல்லது கமலிடம் இருந்து கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்