Paristamil Navigation Paristamil advert login

வன்முறையில் ஈடுபட்ட சிறுவர்களது பெற்றோர்கள் நஷ்ட்ட ஈடு செலுத்த வேண்டும்! - பிரதமர் அறிவிப்பு!!

வன்முறையில் ஈடுபட்ட சிறுவர்களது பெற்றோர்கள் நஷ்ட்ட ஈடு செலுத்த வேண்டும்! - பிரதமர் அறிவிப்பு!!

26 ஐப்பசி 2023 வியாழன் 17:43 | பார்வைகள் : 12260


நகர்புற வன்முறைகளில் ஈடுபட்ட சிறுவர்களது பெற்றோர்கள் நஷ்ட்ட ஈடு செலுத்தவேண்டும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

இவ்வருடத்தின் நடுப்பகுதியில் பரிஸ் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் இரவு நேர வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை அறிந்ததே. இந்த வன்முறையில் பல நூறு சிறுவர்கள் ஈடுபட்டிருந்தனர். 

பதினெட்டு வயதுக்கு குறைந்தவர்கள் என்பதால் சட்டத்தின் இறுக்குப் பிடியில் அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இது தொடர்பான விவாதம் ஒன்றை முன்மொழிந்தார். அதில் சிறுவர்கள் குற்றச்செயல்களின் ஈடுபட்டால், அதற்குரிய நஷ்ட்ட ஈட்டினை அவர்களின் பெற்றோர்கள் செலுத்த வேண்டும் என பிரதமர் Élisabeth Borne தெரிவித்தார்.

பிள்ளைகளின் கல்விக்காக பணம் பெறப்படும் போது, அவர்களால் ஏற்படும் இழப்புக்களுக்கும் அவர்களே பொறுப்புக்கூறவேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    2

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்