Paristamil Navigation Paristamil advert login

சட்டசபை தேர்தலை முன்னிட்டு சோதனை: தெலுங்கானாவில் ரூ.347 கோடி பணம்-பொருட்கள் பறிமுதல்

சட்டசபை தேர்தலை முன்னிட்டு சோதனை: தெலுங்கானாவில் ரூ.347 கோடி பணம்-பொருட்கள் பறிமுதல்

27 ஐப்பசி 2023 வெள்ளி 10:58 | பார்வைகள் : 4509

சட்டசபை தேர்தலை முன்னிட்டு சோதனை: தெலுங்கானாவில் ரூ.347 கோடி பணம்-பொருட்கள் பறிமுதல்

தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30-ந்தேதி நடைபெற உள்ளது. நேற்றுவரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.347 கோடி மதிப்புள்ள ரொக்க பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன

இதன்படி ரூ.122.6 கோடி ரொக்கம், 230.9 கிலோ தங்கம், 1,038.9 கிலோ வெள்ளி, ரூ.20.7 கோடி மதிப்புள்ள மதுபானம், ரூ.17.18 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் ரூ.30.4 கோடி மதிப்புள்ள இலவச பொருட்கள் என மொத்தம் ரூ.347 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

வர்த்தக‌ விளம்பரங்கள்