எகிப்தில் ஏவுகணை தாக்குதல்....
27 ஐப்பசி 2023 வெள்ளி 07:58 | பார்வைகள் : 4864
எகிப்து நாட்டின் தபா பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றிற்கு ஏவுகணை தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை தொடங்கினர்.
இதையடுத்து உடனடியாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, போர் பிரகடனத்தை இஸ்ரேல் அறிவித்தது.
ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து செயல்படும் இடம் என தெரிவித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியது.
இதன்போது இஸ்ரேலிய ராக்கெட்டுகளால் காசா நகரம் முழுவதும் சூறையாடப்பட்டது.
இந்நிலையில் எகிப்து நாட்டின் தபா பகுதியில் உள்ள கட்டடம் ஒன்று ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி, ஐந்து பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தபாவில் உள்ள கட்டிடங்கள் மீது குண்டுவெடித்ததில் 5 எகிப்தியர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தபா செங்கடலில் உள்ள ஒரு ரிசார்ட் நகரமாகும், இது சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான ஒன்றாகும்.
இது காசாவில் இருந்து 350 கிலோமீட்டர் (220 மைல்) தொலைவில் இஸ்ரேலின் செங்கடல் துறைமுக நகரமான ஈலாட்டுக்கு எதிரே அமைந்துள்ளது.
இதற்கு முதல் இஸ்ரேல் ஏவுகணை எகிப்து பகுதியை தவறுதலாக தாக்கியது. அதன்போது இது தவறுதலாக தாக்கப்பட்டது என்று இஸ்ரேல் ரானுவம் உடனடியாக தெரிவித்திருந்தது.
ஆனால் தபா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலை இஸ்ரேல் நடத்தவில்லை என ராணுவம் அறிவித்திருந்தது. அதேபோல் பாலஸ்தீனத்தில் உள்ள அமைப்பும் நடத்தவில்லை என அறிவித்தது.
தபா வழியாக காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.