கொழும்பு தீ விபத்தில் 23 பேர் வைத்தியசாலையில் - 06 பேர் கவலைக்கிடம்
27 ஐப்பசி 2023 வெள்ளி 08:01 | பார்வைகள் : 10007
கொழும்பு கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள ஆடையகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 06 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 09.30 மணியளவில் இரண்டாவது குறுக்குத் தெருவில் ஆடையகம் ஒன்றில் தீ பரவியது.
கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீ விபத்திற்கு உள்ளான கட்டிடம் ஒரு ஆடை விற்பனையகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் வெள்ளிக்கிழமை என்பதன் காரணமாக, காலையில் ஊழியர்கள் வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் தீப்பற்றியிருக்கலாம் என அருகிலுள்ளவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உடனடியாக தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமையே முழு கட்டிடத்திற்கும் தீ பரவியமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan