ரஷ்ய ஜனாதிபதி புடின் உயிரிழந்ததாக அறிவிப்பு- கிரெம்ளின் மாளிகை விளக்கம்
27 ஐப்பசி 2023 வெள்ளி 08:10 | பார்வைகள் : 4218
ரஷ்ய ஜனாதிபதி புடின் புற்றுநோய் காரணமாக நேற்றிரவு உயிரிழந்ததாக டெலிகிராம் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புடினுடைய உடல் நிலை குறித்து நீண்ட நாட்களாக செய்தி வெளியிட்டுவரும் டெலிகிராம் சேனலான General SVR சேனல், நேற்றிரவு வெளியிட்ட செய்தி ஒன்றில்,
மக்கள் கவனத்துக்கு... தற்போது ரஷ்யாவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று மாலை 8.42 மணிக்கு, Valdaiயிலுள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார்.
மருத்துவர்கள் உயிர் காக்கும் சிகிச்சையை நிறுத்தி, புடின் மரணமடைந்ததாக அறிவித்தனர்.
ராணுவ தளபதி Dmitry Kochnevஇன் உத்தரவின் பேரில், புடினுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் புடினுடைய உடல் இருக்கும் அறையில் ஜனாதிபதியின் பாதுகாவலர்களால் பிடித்துவைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த General SVR சேனல்இதற்கு முன்பும் இதேபோன்ற செய்திகளை வெளியிட்டுள்ளது.
மேலும் கடந்த வாரம் கூட புடினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவர் தரையில் விழுந்து கிடந்ததாகவும் அந்த சேனல் தெரிவித்தது.
அத்துடன், நீண்ட நாட்களாகவே, புடினுக்கு புற்றுநோய் என்றும், தொலைக்காட்சியில் தோன்றுவது அவருடைய டூப் என்றும் இந்த சேனல் தெரிவித்து வருகின்றமை உண்மையா பொய்யா என தெரியவில்லை.
ஆனால், அதற்கெல்லாம் மறுப்பேதும் தெரிவிக்காத கிரெம்ளின் மாளிகை, இம்முறை புடின் இறந்துவிட்டதாக கூறப்படும் செய்திக்கு மட்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
அந்த செய்தி, ஆதாரமற்ற ஒரு புரளி என்று கூறியுள்ள கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.