காசாவில் மருத்துவமனைகளும் பிரேத அறைகளும் நிரம்பி வழியும் அவலம்
.jpg)
30 ஐப்பசி 2023 திங்கள் 09:26 | பார்வைகள் : 13663
இஸ்ரேல்- ஹமாஸ் போர் காரணமாக தங்கள் அன்புக்குரியவர்களுக்கு இறுதி மரியாதை செய்வதற்கான வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக பாலஸ்தீனியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த 7 ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரே - ஹமாஸ் போரில் உயிரிழந்தவர்களின் உடல்களால் மருத்துவமனைகளும் பிரேத அறைகளும் நிரம்பி வழிந்துள்ளது.
இதன் காரணமாகவும் இடைவிடாத தொடர்ச்சியான விமானக்குண்டுவீச்சு காரணமாகவும் இறுதிநிகழ்வுகளும் நினைவுகூருவதும் சாத்தியமற்ற விடயங்களாக மாறியுள்ளன. புதியவர்களை புதைப்பதற்காக ஏற்கனவே காணப்படும் புதைகுழிகளை தோண்டி அகலமாக்கவேண்டிய நிலையில் குடும்பங்கள் காணப்படுகின்றன.
மருத்துவமனைகளில் இடமின்மை காரணமாக மருத்துவமனை பணியாளர்கள் உடல்களை புதைத்த பின்னரே உறவினர்களிற்கு தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேலின் தாக்குதலில் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டால் அவர்களை அடையாளம் காண்பதற்காக குடும்ப உறுப்பினர்களின் கரங்களில் பிரஸ்லட் அணிவிக்கும் நடைமுறை கடந்த சில நாட்களாக காசாவில் உள்ளவர்கள் மத்தியில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை மனதை கலகடிக்கின்றது.
குழந்தைகள் சிறுவர்களின் கைகால்களில் மார்க்கர்களால் அவர்களின் பெயர்களை எழுதுகின்றனர்.
கடந்த மூன்று வாரங்களாக முற்றுகையிடப்பட்டுள்ள காசாமீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் உலக அரங்கில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
8000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இவர்களில் 3300 பேர் சிறுவர்கள் என கூறப்படுகின்றது.
மேலும் 1650 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளதாகவும் அவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள் எனவும் அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகியுள்ளன.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1