சினிமாவில் இருந்து விலகும் அல்போன்ஸ் புத்திரன்?

30 ஐப்பசி 2023 திங்கள் 13:13 | பார்வைகள் : 6442
‘நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கிய 'கோல்டு' படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் நடித்திருந்தனர்.
கோல்டு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத்தொடங்கியது. இது குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் முகநூல் பதிவும் வைரலானதும் பின்னர் அவர் அதை நீக்கியதும் குறிப்பிடத்தக்கது. கோல்டு படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் கடந்தாண்டு டிசம்பர் 29ஆம் நாள் வெளியானது. தற்போது கிப்ஃட் எனும் படத்தினை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் காலை 11 மணியளவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அல்போன்ஸ் பதிவிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறிது நேரத்தில் அந்தப் பதிவு நீக்கப்பட்டாலும் பலரும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து இணையத்தில் பேசுவதால் வைரலாகியுள்ளது.
சினிமா திரைப்படங்களை இயக்குவதில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஏஎஸ்டி (ஆடிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்) உள்ளதை நானே நேற்றுதான் கண்டறிந்தேன். நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் தொடர்ந்து பாடல், விடியோக்கள், குறும்படங்கள் மற்றும் முடிந்தால் ஓடிடியில் படங்களை இயக்குவேன்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1