மணிக்கு 180 கி.மீ வேகத்தில் புயல்! - எச்சரிக்கை!!
30 ஐப்பசி 2023 திங்கள் 17:14 | பார்வைகள் : 5379
பிரெஞ்சு தீவான Corse இல் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் புயல் வீசும் என தெரிவிக்கப்பட்டு, அங்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அங்கு பலத்த புயல் வீசும் எனவும், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கும் படியும் கோரப்பட்டுள்ளது. குறிப்பாக தீவின் வடக்கு நகரமான Haute-Corse மாவட்டத்தில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரம் முறிவு, மின்சாரத்தடை போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து பூங்கா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் கூடும் இங்கள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.