Paristamil Navigation Paristamil advert login

ஹலோவீன் பண்டிகை! - நாடு முழுவதும் மிகுந்த கண்காணிப்பு - உள்துறை அமைச்சர்!!

ஹலோவீன் பண்டிகை! - நாடு முழுவதும் மிகுந்த கண்காணிப்பு - உள்துறை அமைச்சர்!!

30 ஐப்பசி 2023 திங்கள் 18:12 | பார்வைகள் : 7438


ஹலோவீன் பண்டிகையின் போது நாடு பலத்த கண்காணிப்பின் கீழ் இருக்கும் எனவும், எவ்வித வன்முறைகளுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.

ஹலோவீன் பண்டிகை கொண்டாடப்படும் இரவில் நகர்ப்புறங்களில் ஏற்படும் வன்முறைகளை தடுப்பதற்காக ("prévention des violences urbaines" )  சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். 

வன்முறைகள், தாக்குதல்கள், வாகன எரிப்புக்கள் உள்ளிட்ட வன்மூறைச் சம்பவங்கள் இடம்பெறும் அபாயம் எழுந்துள்ளதால், உயர்நிலை விழிப்புணர்வு நடைமுறையில் இருக்கும், மற்றும் சமூகவலைத்தளங்களூடாக ஒழுங்கமைக்கப்படும் நிகழ்வுகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

எரிபொருள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்பவர்களையும் காவல்துறையினர் கண்காணிப்பார்கள் எனவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்