Paristamil Navigation Paristamil advert login

பதினைந்தாவது முறையாக 49.3 அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்திய பிரதமர்! - மீண்டும் நம்பிக்கை இல்லா பிரேரணை!!

பதினைந்தாவது முறையாக 49.3 அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்திய பிரதமர்! - மீண்டும் நம்பிக்கை இல்லா பிரேரணை!!

31 ஐப்பசி 2023 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 4381


நேற்று திங்கட்கிழமை பதினைந்தாவது முறையாக பிரதமர் Elisabeth Borne, 49.3 எனும் அரசியலமைக்கு சட்டத்தை பயன்படுத்தினார். அவரது அரசாங்கம் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா பிரேரணை சமர்ப்பித்தது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை பகுதி பகுதியாக பாராளுமன்றத்தில் பிரதமர் சமர்ப்பித்து வருகிறார். தற்போது சமூக பாதுகாப்புக்கான வரவுசெலவுத் திட்டத்தினை (budget de la Sécurité sociale) சமர்ப்பித்து வருகிறார். அதன் ஒரு பகுதியை நேற்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் வாசிக்கும் போது, எதிர்கட்சிகள் பெரும் ஆரவாரம் செய்தனர்.

வாக்கெடுப்பின்றி சட்டம் நிறைவேற்ற பயன்படும் 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தினை பயன்படுத்தி நேற்றைய தினம் தனது வரவுசெலவுத் திட்டத்தினை முன்வைத்தார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத மக்ரோனின் அரசாங்கம், இந்த சட்டத்தினை பயன்படுத்துவது இது 15 ஆவது தடவையாகும்.

அதையடுத்து, RN ம்ற்றும் La France insoumise ஆகிய கட்சிகள் மக்ரோனின் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை (motions de censure) கொண்டுவந்திருந்தனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்