Paristamil Navigation Paristamil advert login

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் - பிரதமர் மோடி

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் - பிரதமர் மோடி

31 ஐப்பசி 2023 செவ்வாய் 14:53 | பார்வைகள் : 7610


இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியான சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தின் நர்மதா மாவட்டம் கெவாடியாவில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் பேசிய பிரதமர் மோடி, "கடந்த நூற்றாண்டில், நாடு சுதந்திரம் அடைவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன், ஒவ்வொரு இந்தியனும் சுதந்திரத்திற்காக தன்னைத்தானே வருத்திக்கொண்ட ஒரு காலம் இருந்தது. இப்போது, அடுத்த 25 ஆண்டுகளில் ஒரு வளமான இந்தியாவை உருவாக்குவதற்காக அதேபோன்ற ஒரு காலத்தை நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.  

இந்த நூற்றாண்டின் அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிக முக்கியமான காலகட்டம். நாம் இந்தியாவை வளமான மற்றும் வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். சர்தார் வல்லபாய் படேலிடம் இருந்து உத்வேகம் பெற்று நாம் நமது இலக்கை அடைய வேண்டும்" என்று தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்