மருந்து, மாத்திரைகள் நுகர்வோர் தொகையில் பிரான்ஸ் எட்டாவது இடத்தில். Organization for Economic Co-operation and Development (OECD)
31 ஐப்பசி 2023 செவ்வாய் 08:15 | பார்வைகள் : 4620
பிரான்ஸ் மருந்து, மாத்திரைகளை வாங்குவதிலும், நுகர்வோரிலும் எட்டாவது இடத்தில் இருப்பதாக Organization for Economic Co-operation and Development (OECD) எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.
2021ம் ஆண்டின் கணக்கின்படி பிரான்ஸ் ஒரு நபருக்கு வருடம் ஒன்றுக்கு சுமார் 765$ அமெரிக்கா dollar's மருந்துகளை வாங்குவதற்கு செலவு செய்யப்படுகிறது. இந்த வரிசையில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அங்கு ஆண்டு ஒன்றுக்கு நபருக்கு 1432$ அமெரிக்கா dollar'sம், இரண்டாம் இடத்தில் Germany 1042$, அடுத்து MALTA 947$, CANADA 914$, JAPAN 835$, Korea 803$, அதே தொகையில் ஏழாவது இடத்தில் SWITZERLAND 803$ அமெரிக்கா dollar's செலவு செய்கிறது.
உலகம் முழுவதும் மருந்தகங்களில் வாங்கப்படும் மருந்துவகைகள் முழுமையாக நுகரப்படுகிறதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது எனவும் Organization for Economic Co-operation and Development தெரிவித்துள்ளது.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ் மருந்துவகைகளை அதிகம் நுகரும் நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் இருந்தது. இன்று படிப்படியாக இறங்கி எட்டாவது இடத்தில் இருப்பதாக தெரியவருகிறது.