Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு மக்களிடையே - உணவுப்பொருட்கள் கொள்முதல் அதிகரிப்பு!

பிரெஞ்சு மக்களிடையே - உணவுப்பொருட்கள் கொள்முதல் அதிகரிப்பு!

31 ஐப்பசி 2023 செவ்வாய் 08:54 | பார்வைகள் : 4984


விலை அதிகரிப்பு காரணமாக மக்களிடையே குறைந்திருந்த உணவுப்பொருகள் கொள்முதல், செப்டம்பர் மாதத்தில் ஓரளவு சீரடைந்துள்ளதாக INSEE கருத்துக்கணிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சென்ற செப்டம்பர் மாதத்தில் இந்த கொள்முதல் 0.2% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதிக விலை, பணவீக்கம் காரணமாக பிரெஞ்சு மக்களிடையே குறைந்திருந்த ‘கொள்முதல் திறன்’ படிப்படையாக சீரடைந்து வருகிறது.

சென்ற மாதம் 0.2% சதவீதத்தால் அதிகரிக்க, இவ்வருடத்தின் முதல் மூன்று காலாண்டுகளில் இது 0.8% சதவீதமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக குளிர்பானங்கள், வெதுப்பக உற்பத்தி பொருட்கள், பாஸ்தா உணவுகள் போன்றவைகளின் விற்பனை கணிசமாக வீழ்ச்சியடைந்திருந்தது. சிகரெட் விற்பனை மிக மோசமாக வீழ்ச்சியடைந்திருந்தது.

சென்ற 2022 ஆம் ஆண்டு செப்டம்பரோடு ஒப்பிடுகையில், பிரெஞ்சு மக்கள் உணவுப்பொருட்கள் கொள்வனவு செய்வது 3.9% சதவீதமாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்