இந்திய கிரிக்கட் அணியின் கேப்டனில் இருந்து விலகும் ரோஹித் சர்மா
31 ஐப்பசி 2023 செவ்வாய் 09:11 | பார்வைகள் : 2310
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் வைத்து 13வது உலக கோப்பை தொடர் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் இந்த உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.
இந்நிலையில் உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரோகித் சர்மாவுக்கு தற்போது 36 வயது ஆகும் நிலையில், உலக கோப்பை பிறகு மிகப்பெரிய ஐசிசி தொடர் என்றால் 2025ம் ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தான்.
அப்போது ரோகித் சர்மாவுக்கு 38 வயது ஆகி விடும், எனவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விலக முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் அடுத்த புதிய கேப்டனுக்கான இடத்தில் கே.எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர். ஹர்திக் பாண்டியா ஏற்கனவே டி20 போட்டிகளுக்கான கேப்டனாக உள்ளார்.
ஆனால் இறுதியாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் அவரது கேப்டன்சி பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
அதே சமயம் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள கே.எல் ராகுல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்று தந்துள்ளார்.
மேலும் தற்போதைய உலக கோப்பை போட்டிகளில் சிறப்பான பேட்ஸ்மேன் ஆகவும் ஜொலித்து வருகிறார்.
எனவே உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன்சி கே.எல் ராகுலிடம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.