Paristamil Navigation Paristamil advert login

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் கூல் சுரேஷ்!

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் கூல் சுரேஷ்!

31 ஐப்பசி 2023 செவ்வாய் 10:33 | பார்வைகள் : 2994


பிக்பாஸ் வீட்டில் இன்று, போட்டியாளர்களுக்கு தலையில் மணி ஒன்றை கட்டிக்கொண்டு அதில் சத்தம் வராதபடி ஃப்ரீஸ் -ஆகி ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்கிற டாக்ஸ் ஒன்றை கொடுக்கிறார். பிரதீப் தனியாக தலையில் மணி கட்டிக்கொண்டு அங்கும், இங்கும் நடக்க, வாண்டடாக வந்து வாயை கொடுத்து வாங்கி கட்டி கொள்கிறார் கூல் சுரேஷ்.

பிரதீப் மரியாதை இல்லாமல் பேச பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கூல் சுரேஷ் தன்னுடைய பெட்டி படுக்கையுடன் வெளியேறியதை முதல் புரோமோவில் பார்க்க முடிந்தது. 

இதைத்தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், கூல் சுரேஷை பிரதீப், சில்லற பையன் என மரியாதை இல்லாமல் வாடா போடா என பேசுகிறார். கூல் சுரேஷுக்கு ஆதரவாக, விஷ்ணு, நிக்சன் ஆகியோர் பரிந்து பேச, நான் அப்படிதான் பேசுவேன் என காரம் சாரமாக பேசுகிறார். இதனால் வரும் பிரச்சனையால் தான் கூல் சுரேஷ் வெளியேறும் அளவுக்கு ஆவேசம் அடைகிறார் என தெரிகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்