இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அதிகரிக்கும் சிறுவர்களின் மரணம்
31 ஐப்பசி 2023 செவ்வாய் 12:01 | பார்வைகள் : 3291
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 3,000 க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி போர்நிறுத்தம் என சிறுவர்களைப் பாதுகாக்கும் அனைத்துலக அமைப்பான ‘சேவ் தி சில்ரன்’ அமைப்பின் இயக்குனர் ஜேசன் லீ தெரிவித்துள்ளார்.
மூன்று வாரங்களாக போர் நீடித்து வருகின்றது.
இந்த போரில் காஸா பகுதியில் ஏறக்குறைய 3,195 பலஸ்தீனியக் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்க் பகுதியில் 33 குழந்தைகளும் இஸ்ரேலில் 29 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இரு தரப்பும் மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் காஸாவில் மட்டும் இதுவரையில் 8,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் அதிகமானோர் பெண்கள், குழந்தைகள் ஆகும். போரில் பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்படுவதால் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. அமைப்பும், உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.