ஹமாஸின் பதுங்கு குழிகளை அழித்த இஸ்ரேல் படை
29 ஐப்பசி 2023 ஞாயிறு 07:01 | பார்வைகள் : 3959
இஸ்ரேல்-ஹமாஸ் படைகள் இடையே 22 நாட்களாக போர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலிய ராணுவ படை பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
இதனால் பாலஸ்தீனத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஹமாஸ் உடனான போரானது கடினமானது மற்றும் நீண்ட காலம் நீடிக்க கூடியது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேலிய விமானப்படை விமானங்கள் துல்லிய தாக்குதல் நடத்தி ஹமாஸ் படையினரின் 150 பதுங்கு குழிகளை அழித்து இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த துல்லிய தாக்குதலின் போது ஹமாஸ் அமைப்பினரின் வீரர்கள் பலர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் எதிரிகளின் பதுங்கு குழிகள், சுரங்கங்கள், ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் அழிக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.