இலங்கையில் நடந்த சோகம் - பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

29 ஐப்பசி 2023 ஞாயிறு 08:00 | பார்வைகள் : 7971
பொலன்னறுவையில் பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த போது தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த (24) வயதுடைய அஸ்பாக் என்பவரே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,
குறித்த பேருந்து வவுனியாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் படியில் நின்று கொண்டு சென்ற நபர் பேருந்தின் சாரதி திடீரென ப்ரேக் அடித்ததால் குறித்த நபர் வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளார்.
இதனால் காயங்களுக்குள்ளான நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025