அவுஸ்திரேலியாவில் இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு சார்பாக ஆர்ப்பாட்டங்கள்
29 ஐப்பசி 2023 ஞாயிறு 09:14 | பார்வைகள் : 3665
அவுஸ்திரேலியாவில் சிட்னி மற்றும் மெல்பேர்னில் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலிற்கும் ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
அதில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
சிட்னியில் இஸ்ரேலிற்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்காக யூதசமூகத்தினர் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் குறித்து கவனத்தை ஈர்ப்பதே தங்களின் நோக்கம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களை வீட்டிற்கு கொண்டுவாருங்கள் என்ற இஸ்ரேல் சார்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவர்கள் சிறுவர்களும் பெண்களும் ஹமாசினால் பிடிக்கப்பட்டுள்ளதை காண்பிப்பதற்காக காலணிகள் பிராம்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தியுள்ளனர்.
பகுதிவரை பேரணியாக சென்றவர்கள் அங்கு பாடல்கள் பிரார்த்தனைகளுடன் தங்கள் ஆர்ப்பாட்டங்களை நிறைவு செய்தனர்
தீவிரமடையும் வன்முறைகள் காரணமாக அவுஸ்திரேலியாவில் உள்ள யூத சமூகத்தினர் அச்சமடையக்கூடாது அவுஸ்திரேலியாவில் சிட்னியில் உள்ள யூத சமூகத்திற்கு நம்பிக்கையை வழங்கவே இந்த ஆர்ப்பாட்டம் என உரையாற்றிய ஒருவர் தெரிவித்துள்ளார்.
மெல்பேர்னிலும் இஸ்ரேல் சார்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை மெல்பேர்னின் மாநில நூலகத்திற்கு வெளியே பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
சுதந்திர பாலஸ்தீனம் என கோசமிட்டவாறு பாலஸ்தீன கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடி யுத்த நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ளனர்.