ரஜினி 170: படக்குழு பகிர்ந்த புதிய அப்டேட்

29 ஐப்பசி 2023 ஞாயிறு 09:54 | பார்வைகள் : 9540
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இன்று முதல் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடந்து முடிந்த நிலையில் இப்போது இரண்டாம் கட்ட காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றன. அங்கு அமிதாப் பச்சன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. 32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்தும் , அமிதாப் பச்சனும் இந்த படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மும்பையில் இப்போது ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் ஆகிய இருவரும் இருக்கும் புகைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும் :
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1