Paristamil Navigation Paristamil advert login

இலங்கை அரச ஊழியர்களின் கடமை நேரத்தை 12 மணித்தியாலங்களாக மாற்ற திட்டம்!

இலங்கை அரச ஊழியர்களின் கடமை நேரத்தை 12 மணித்தியாலங்களாக மாற்ற திட்டம்!

29 ஐப்பசி 2023 ஞாயிறு 10:18 | பார்வைகள் : 3575


அரச ஊழியர்கள் ஒரு நாளைக்கு இடைவேளை உள்ளடங்களாக 12 மணிநேரம் மேலதிக நேர கொடுப்பனவுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்ற புதிய வேலைவாய்ப்பு சட்டமூலம் ஒன்று தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவால் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டத்தை உருவாக்குவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில், அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் நாட்டின் பிரதான தொழிற்சங்கங்களின் தலைவர்கள் பங்களிப்புடன் அலரி மாளிகையில் நடைபெற்றது.

அந்த விவாதங்களின்படி தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள் அடங்கிய புதிய வேலைவாய்ப்பு சட்டமூலம் தொடர்பான முன்மொழிவுகளை பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த சட்டம் மூலத்தின் அடிப்படையில், எட்டு மணி நேர வேலை நேரத்திற்கு பின் மேலதிகமாக பணியாற்றும் ஊழியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகள் இல்லாமால் போகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், வாரத்தில் 45 மணி நேரம் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு 1 1/2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று புதிய சட்டம் பரிந்துரைத்துள்ளது.

புதிய வேலைவாய்ப்புச் சட்டத்தின் அடிப்படையில், ஊழியர் ஓய்வுபெறுவதற்கான குறைந்தபட்ச வயது 55 ஆக இருக்க வேண்டும் என்றும் 60 வயது வரை சேவையில் ஈடுபடுவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்ட ஊழியர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தக் கூடாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்