விருதுகளை வாங்கி குவித்த கூழாங்கல்! விமர்சனம்
29 ஐப்பசி 2023 ஞாயிறு 10:23 | பார்வைகள் : 3179
வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் படம் தற்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வாங்கி குவித்த நிலையில் இப்போது இந்த படத்தைப் பற்றிய விமர்சனத்தை பார்க்கலாம். புதுமுக நடிகர்களை வைத்து மிக அருமையான படத்தைக் கொடுத்திருக்கிறார் வினோத் ராஜ்.
அதாவது தண்ணீர் பஞ்சத்துடன் உள்ள வறண்ட கிராமத்தில் வசித்து வருகிறார் கணபதி. மதுபழக்கத்திற்கு மிகவும் அடிமையான இவர் தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு ஒரு நீண்ட நெடுதூரம் செல்கிறார். அதாவது தனது மனைவி கோபித்துக் கொண்டு அவரது அம்மா வீட்டுக்கு சென்றதால் அவரை அழைக்க செல்கிறார்.
மேலும் தந்தை, மகன் இடையே இந்தப் பயணம் தான் படத்தின் சுவாரசியத்தை கூட்டி இருக்கிறது. சிறுவனாக இருந்தாலும் அவனுக்கு உண்டான பக்குவத்தைப் பார்க்கும்போது வியப்படைய வைக்கிறது. மேலும் இந்த பயணம் சென்று கொண்டிருக்கும்போதே சிறுவனின் தந்தை சிகரெட், குடி போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்.
அங்க போய் பார்த்தால் மனைவி தனது கணவன் வீட்டுக்கு சென்று விட்டார் என்ற செய்தி கிடைக்கிறது. இதனால் மீண்டும் இருவரும் தங்களது வீட்டுக்கு திரும்புகிறார்கள். இப்போது சிறுவன் ஒரு கூலாங்கல்லை எடுத்த ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறான். அதுதான் படத்திற்கான சஸ்பென்ஸை வெளிப்படுகிறது.
அதுதான் படத்தின் டைட்டில் கூலாங்கள் என்று வைப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும் அறிமுக நடிகர்களாக இருந்தாலும் நிறைய இடங்களில் நீண்ட காட்சிகளை வைத்து பிரமிக்க செய்திருக்கிறார். மேலும் கமர்சியல் படங்களை விரும்புபவர்களுக்கு கூழாங்கல் படம் பிடிக்குமா என்பது சந்தேகம் தான்.
ஆனால் ஒரு நல்ல படத்தை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக கூழாங்கல் படம் பிடிக்கும். படத்திற்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் சிறப்பாக இயக்குனர் செயல்பட்டு இருக்கிறார். குறிப்பாக சிறுவனின் நடிப்பு மிகவும் அபாரம். கண்டிப்பாக தமிழ் சினிமா கொண்டாடும் படமாக கூழாங்கல் படம் அமைந்திருக்கிறது.