கருக்கலைப்பு சார்ந்த உரிமைகள் அடங்கிய புதிய அரசியலமைப்பு! - ஜனாதிபதி உறுதி!
29 ஐப்பசி 2023 ஞாயிறு 12:06 | பார்வைகள் : 4894
கருக்கலைப்பு மற்றும் கர்ப்பம் தரித்தல் தொடர்பாக பெண்கள் சுயமாக முடிவெடுக்கக்கூடிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை ஜனாதிபதி இம்மாவனுல் மக்ரோன் முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பான புதிய அறிக்கை ஒன்றை இவ்வருட இறுதியில் Conseil d'État சபைக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளார். 34 ஆவது சட்டமூலத்தில் சில புதிய திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாகவும், அதில் “பெண்கள் கருக்கலைப்புக்கான முடிவினை அவர்களே மேற்கொள்ள முடியும் எனவும், கர்ப்பத்தை தானாக முன்வந்து நிறுத்த முடியும்” போன்ற திருத்தங்களை இணைக்க உள்ளார்.
முன்னதாக, கடந்த மார்ச் 8, சர்வதேச பெண்கள் தினமன்று இது தொடர்பான தனது விருப்பத்தினை வெளியிட்டிருந்தார். “தேசிய சட்டமன்றத்துக்கும் செனட் சபைக்கும் இடையே உள்ள கருத்துக்களுக்கு உடன்படும் அரசியலமைப்பு ஒன்றை நாங்கள் உருவாக்க வேண்டும் என நான் கூறினேன். இந்த கருத்துக்களை ஒன்றிணைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படும்” (வருட இறுதியில்) என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கூறினார்.