ஒலிம்பிக் போட்டிகளை நடாத்த தயாராகியுள்ள பிரான்ஸ் - உள்துறை அமைச்சர் உறுதி!
29 ஐப்பசி 2023 ஞாயிறு 13:44 | பார்வைகள் : 4924
ஒலிம்பிக் போட்டிகளை நடாத்த பிரான்ஸ் முற்று முழுதாக தயாராகியுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.
பிரான்சில் இடம்பெற்ற ரக்பி உலக்கக்கிண்ணம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த மிகப்பெரிய நிகழ்வு அடுத்த ஆண்டு கோடையில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகள் (JO 2024) ஆகும். பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் இருக்கும் நிலையில், பிரான்ஸ் முற்று முழுதாக தயாராகியுள்ளதாகவும், எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு முதன்முறையாக பொது வெளியில் இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வுக்காக காத்திருப்பதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை la Plaine Saint-Denis (Saint-Denis) நகருக்கு பயணம் மேற்கொண்டிருந்த உள்துறை அமைச்சர், அங்கு வைத்தே இதனைக் குறிப்பிட்டார்.