ராகி புட்டு
29 ஐப்பசி 2023 ஞாயிறு 14:37 | பார்வைகள் : 3020
சுவையும், ஆரோக்கியமும், நிறைந்த உணவு வகை. இதனை 15 முதல் 20 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யலாம். காலை /இரவு நேர உணவாக அல்லது மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம். கேழ்வரகு மாவு, நாட்டு சர்க்கரை, தேங்காய், ஆகியவற்றை கொண்டு செல்வதால் ஆரோக்கியம் நிறைந்த அதே சமயத்தில் சுலபமான முறையில் செய்யக்கூடிய உணவு.
ராகி புட்டு செய்ய தேவையான பொருட்கள்
ராகி மாவு – 1 கப் (150g)
பச்சரிசி மாவு – ¼ கப் (40g)
உப்பு – ¼ தேக்கரண்டி/ தேவைக்கேற்ப
தேங்காய் – 1 கப்
செய்முறை
ஒரு பவுலில் 1 கப் ராகி மாவை எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் 1/4 கப் பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்.
1/4 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து ஈர மணல் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
உதிர் உதிராக மாவைத் தயார் செய்து கொள்ளவும் சிறு கட்டிகள் இருந்தால் உடைத்து விடவும் அல்லது சலித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் 2 முதல் 3 தேக்கரண்டி துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் 2 – 3 தேக்கரண்டி மாவு சேர்த்துக் கொள்ளவும். கிண்ணம் நிறையும் வரை இதே போல செய்யவும்.
கடைசியாக மேலே தேங்காய் வைத்து லேசாக அழுத்தி விடவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து சூடானதும் ஒரு ஸ்டீமர் தட்டு அல்லது ஒரு ஸ்டாண்டின் மீது தட்டி வைக்கவும்.
பின்னர் தயார் செய்து வைத்துள்ள புட்டு கிண்ணத்தை அதனுள் வைக்கவும்.
மூடி வைத்து 10 முதல் 12 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். 12 நிமிடங்களுக்குப் பின்னர் ஓரத்தில் இருந்து எடுத்து தொட்டு பார்க்கவும் கைகளில் ஒட்டாமல் வந்தால் சுவையான ராகி புட்டு தயார்.