Paristamil Navigation Paristamil advert login

பாதுகாப்பு துப்பாக்கியை பயன்படுத்துவதில் சலுகை! - ஆர்ப்பாட்டக்காரர்கள் அவதானம்!

பாதுகாப்பு துப்பாக்கியை பயன்படுத்துவதில் சலுகை! - ஆர்ப்பாட்டக்காரர்கள் அவதானம்!

29 ஐப்பசி 2023 ஞாயிறு 16:55 | பார்வைகள் : 3582


காவல்துறையினரிடம் இருக்கும் LBD என அழைக்கப்படும் இறப்பர் குண்டுகளான பாதுகாப்பு துப்பாக்கியை (lanceur de balles de défense) பயன்படுத்துவதில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காவல்துறையினரால் குறித்த துப்பாக்கியை 10 மீற்றர் தொலைவில் இருக்கும்போது மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருந்தது. தற்போது இந்த தூரம் 3 மீற்றர்களாக குறைக்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கியில் இருந்து பாயும் குண்டுகள் மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றன. 

குற்றவியல் தடுப்பு பிரிவினர் (Brigade Anti-Criminalité) மற்றும் பாதுகாப்பு காவல்துறையினர் (Compagnies de Sécurité et d’Intervention) ஆகிய படைப்பிரிவினர் பயன்படுத்தப்படும் இவ்வகை துப்பாக்கிகள் கடந்த 2018 ஆம் ஆண்டில் பெரும் சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. “மஞ்சள் மேலங்கி” போராட்டக்குழுவினர் பலர் இந்த துப்பாக்கியால் காயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கியினை பயன்படுத்துவதற்கு மக்களிடையே எதிர்ப்பு இருக்கும் நிலையில், தற்போது இந்த அறிவிப்பு மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த துப்பாக்கியின் இறப்பர் குண்டுகள் உயிராபத்தை ஏற்படுத்தாது என்றபோதும், குணப்படுத்தமுடியாத உடல் ஊனங்களை தோற்றுவிக்கும் அபாயம் கொண்டவை என விமர்சிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்