இஸ்ரேல்-ஹமாஸ் போரின் தீவிரம் - 9 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
.jpg)
30 ஐப்பசி 2023 திங்கள் 02:38 | பார்வைகள் : 7041
இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் 23வது நாளாக தொடர்ந்து வருகிறது.
ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 1,403 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், இதுவரை 7, 703 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் நடந்த மோதலில் மேலும் 109 பேர் கொல்லப்பட்டனர்.
இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் படையினர் இடையிலான போரில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,217 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இடிப்பாடுகளில் பல சடலங்கள் இருக்கம் என மீட்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.