விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

மனவுளைச்சல், பொழுது போகவில்லை என்றால் நகம் கடிப்பவரா நீங்கள்?

24 April, 2021, Sat 7:24   |  views: 2937

 நகங்களைக் கடிப்பதுகூட தெரியாமல் அவற்றைக் கடிப்பவரா நீங்கள்?

 
உங்களைப் போல பலர் உள்ளனர்...
மனவுளைச்சல்... பொழுது போகவில்லை.. கோபம்...
 
இப்படி பலதரப்பட்ட காரணங்களுக்காக நகங்களை "நறுக்! நறுக்!" என்று கடித்துத் துப்புவோர் உண்டு.
 
குறிப்பாக அந்தப் பழக்கம், சிங்கப்பூரில் கணிசமாகவே இருப்பதாகக் கூறுகிறார்,
DTAP மருந்தக மருத்துவர் ஜூலியன் ஹொங்.
 
17 வயதிலிருந்து 35 வயதுக்கு உட்பட்டோரில், இங்கு ஐந்தில் ஒருவருக்கு அந்தப் பழக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 
அந்தப் பழக்கத்தைச் சிலர் பிரச்சினையாகவே பார்ப்பதில்லை... ஒரு சிலரோ அதற்கு மருத்துவ உதவி நாட வெட்கப்படுகின்றனர்.
 
நாற்பது வயதுக்கு மேற்பட்டோரில் எத்தனை பேருக்கு நகம் கடிக்கும் பழக்கம் உள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
 
ஆண்களை விடப் பெண்களே அதிகம் நகம் கடிப்பதாகத் தெரிகிறது.
 
சரி.. நாம் ஏன் நகங்களைக் கடிக்கிறோம்?
 
உண்மையில், மருத்துவரீதியாக இதற்குரிய தெளிவான காரணத்தை வரையறுக்க முடியவில்லையாம்.
 
ஒரு குழந்தை, ரப்பர் உறிஞ்சியைச் சுவைத்து அமைதியடைவதற்கு நிகரானதாம் நகம் கடிப்பது...
 
மரபணுக்களில், அதற்கான பதில் மறைந்திருக்கும் சாத்தியம் இருப்பதாக, மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
நகம் கடிக்கும் பழக்கம் உடையோரின் குடும்பத்தில் பத்தில் நால்வருக்கு, அந்தப் பழக்கம் இருப்பதாகத் தெரிகிறது.
 
பார்க்கவே சகிக்காத அரைகுறை நகங்கள்...அதோடு உடல்நலமும் பாதிக்கப்படும் ஆபத்து.
நகங்களை வாயில்வைத்துக் கடிப்பதால் கிருமித் தொற்று ஏற்படலாம். நகங்களுக்கும் அவற்றைச் சுற்றியுள்ள சதைக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
 
பற்களும் ஈறுகளும் பாதிக்கப்படக்கூடும்.
இந்தப் பழக்கத்தை விட்டொழிப்பது சுலபமா?
பலர், இந்தப் பழக்கத்தால் பல காலமாகப் பிறரிடம் திட்டு வாங்கியிருக்கலாம்...
 
பெற்றோர், விரல்களில் மிளகாய்ப் பொடியைத் தடவியிருக்கக்கூடும்...
 
அழுதுபுரண்டாலும் விட முடியவில்லையே என்று புலம்புவோருக்குப் பல கேள்விகள் இருக்கலாம்.
நகங்கள் கடிப்பதால் ஏற்படும் அபாயங்களைத் புரிந்துகொள்வது ஒரு நல்ல அணுகுமுறை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
பாதுகாப்பான ஆனால் கசப்பான நகப்பூச்சு பூசுவது, கையில் வண்ணமயமான காப்பு போன்றவற்றை அணிந்து கவனத்தைத் திசை திருப்புவது-போன்றவற்றையும் முயற்சி செய்யலாம் என்பது நிபுணர்களின் அறிவுரை.
மருத்துவ ஆலோசனையையும் இந்தப் பிரச்சினைக்காக நாடலாம்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி