விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பூசல்- காஸாவில் என்ன நடக்கிறது?

15 May, 2021, Sat 10:27   |  views: 1932

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையிலான பூசல் அண்மை நாள்களில் தீவிரமடைந்துள்ளது.

 
அங்குள்ள நிலவரம் என்ன? இரு நாடுகளுக்கிடையே என்ன நடக்கிறது?
 
விவரங்களைக் காணலாம்.
 
காஸாவில் என்ன நடக்கிறது?
 
இஸ்ரேலிய நகரங்களை நோக்கிய ஏவுகணைத் தாக்குதல்களாலும் காஸா பகுதியில் நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்களாலும் அங்குள்ள மக்கள், கடும் துன்பத்துக்கு ஆளாகிவருகின்றனர்.
 
காஸாவில், 17 குழந்தைகள் உள்பட 100க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் மாண்டதாக, ஆகக் கடைசித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இஸ்ரேலியத் தரப்பில், பதின்ம வயது இளையர் ஒருவர் உள்பட, குறைந்தது 7 பேர் மாண்டதாகக் கூறப்பட்டது.
 
புதன்கிழமையன்று, காஸாவில் மூன்றாவது உயர்மாடிக் கட்டடம் ஒன்று ஏவுகணை வீசி அழிக்கப்பட்டது.
 
ஹமாஸ் இயக்கம், காஸாவிலிருந்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிப் பாச்சியதாகக் கூறப்படுகிறது.
 
இஸ்ரேலில் என்ன நடக்கிறது?
 
மில்லியன் கணக்கான இஸ்ரேலியர்கள், புதன்கிழமை மாலையில், வெடிகுண்டுத் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் பதுங்குகுழிகளில் தஞ்சமடைந்ததாகக் கூறப்படுகிறது.
 
காஸாவிலிருந்து இஸ்ரேலை நோக்கிப் பாய்ச்சப்பட்ட ஏவுகணையால், இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் மாண்டதாகக் கூறப்பட்டது.
 
பின்னணி
 
கிழக்கு ஜெருசலத்தில், பல வாரங்களாக இஸ்ரேல்- பாலஸ்தீனப் பதற்றம் நிலவும் சூழலில், திங்களன்று பூசல் கடுமையானது.
 
முஸ்லிம்களாலும், யூதர்களாலும் மதிக்கப்படும் புனிதத்தலத்தை முன்னிட்டு, மோதல்கள் உச்சக்கட்டத்தை எட்டியதாகக் கூறப்படுகிறது.
 
மற்ற நாடுகள்?
 
ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்டோணியோ குட்டரெஸ் (António Guterres) அண்மை வன்முறையால், மிகுந்த கவலையடைந்திருப்பதாகக் கூறினார்.
 
ஜெருசலத்தில் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து, சிங்கப்பூரும் ஆழ்ந்த அக்கறை தெரிவித்துள்ளது.
 
வன்செயல்களை நிறுத்திக்கொள்ளுமாறு, அமெரிக்காவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
தற்போதைய நிலவரம்
 
இஸ்ரேலில் அதிகரித்துவரும் வன்முறையால், முழு வீச்சிலான போர் மூளக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
 
இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம் குறித்துக் கலந்துரையாட ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம், வரும் ஞாயிற்றுக்கிழமை கூடவுள்ளது.
 
இன்று பின்னேரம் நடைபெறவிருந்த கூட்டம், அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க ஒத்திவைக்கப்பட்டது.
 
அரசதந்திர நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலனைத்தர, இந்த அவகாசம் உதவுமென வாஷிங்டன் நம்புகிறது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி