விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக் கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

ஜி-7 மாநாடும் ஈழத்தமிழர் குறித்த அமெரிக்க காங்கிரஸின் பிரேரணையும்...!

27 June, 2021, Sun 5:37   |  views: 1613

சீனாவின் பட்டுப்பாதை திட்டம் (Belt and Road Initiative)   இராணுவ வளர்ச்சி ஆகிய இரு துறைகளின் சமீபகால போக்குகளைக் கண்டு ஜி-7 நாடுகளும் நோட்டோ நாடுகளும் அஞ்சுகின்றன என்பதையே கடந் தவாரம் முடிவடைந்த இரண்டு மாநாடுகளின் அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. ஜ-7 மாநாடு லன்டனில் நடைபெற்றது. அது முடிவடைந்ததும் பிறசெல்சில் நடைபெற்ற நோட்டோ நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இரு மாநாடுகளிலும் கலந்துகொண்ட அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் வெளியகச் செயற்பாடுகள் பற்றியே அதிகம் பிரஸ்தாபித்திருந்தார்.

 
ஜ-7 மாநாட்டில் சீனாவின் பொருளாதார நிலை குறித்தும், நேட்டோ மாநாட்டில் ரஷியாவின் இராணுவச் செயற்பாடுகள் பற்றியும் அதிகமாகப் பேசப்பட்டிருக்கிறன.
 
பொருளாதார ரீதியில் சீனாவைக் கட்டுப்படுத்த ஜி-7 மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் அனைத்தும் சீனாவின் பொருளாதாரத் திட்டங்களை முறியடிக்கும் நோக்கில் அமைந்துள்ளன. முக்கியமாக ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு அதிகளவு நிதியை வழங்குவதன் மூலம் சினாவின் பொருளாதாரத்தை குறைந்த பட்சம் வீழ்த்த முடியுமென அமெரிக்கா நம்புகின்றது.
 
அமெரிக்கா சேமித்து வைத்துள்ள பெருமளவு நிதியை முதன் முதலாக இந்தியாவுக்கும் மற்றும் நிதிப் பற்றாக்குறையால் சீனாவின் பிடியில் சிக்கியுள்ள இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளுக்கும் வழங்குவதென ஜ-7 மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவுக்கு வழங்கவுள்ள நிதி என்பது, தெற்காசியாவில் வறுமைப்பட்டுள்ள இலங்கை, நேபாளம், போன்ற நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் இந்தோ- பசுபிக் பிரந்தியப் பாதுகாப்பு விவகாரங்களுக்குமான செலவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவை ஊக்குவிப்பதன் மூலமே சீனாவைக் கட்டுப்படுத்த முடியுமென அமெரிக்கா நம்புகின்றது.
 
ஆனால் அமெரிக்காவின் அனைத்துப் பரிந்துரைகளுக்கும் ஜ-7 நாடுகளின் தலைவர்கள் உடன்பட்டார்கள் என்று கூற முடியாது. குறிப்பாக பிரான்ஸ் ஜனாதிபதி மைக்ரோன். அமெரிக்கா மீது விசனம் வெளியிட்டிருக்கிறார். டொனால் ட்ரம்ப்புக்கும், ஜே பைடன் தலைமையிலான அமெரிக்காவுக்கும் வேறுபாடுகள் இருப்பதை பிரான்ஸ் உணர்ந்து கொணடாலும,; அமெரிக்காவை முற்று முழுதாக நம்ப முடியாதென்ற கருத்துக்களையே மைக்ரோன் மாநாட்டில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
 
குறிப்பாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் விதிமுறையற்ற வர்த்தக விரிவாக்கங்களை ஜ-7 நாடுகளும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் எதிர்க்க வேண்டியது அவசியம்தான். ஆனால் அந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா தலைமையில் மேற்கொள்ள முடியாதென்று பிரான்ஸ் ஜனாதிபதி மைக்ரோன் நேரடியாகவே விதந்துரைத்திருக்கிறார். ஆகவே கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி-7 நாடுகளுக்கிடையே இடைவெளி தோன்றியிருக்கிறதெனலாம்.
 
சீனாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மார்ச் மாதம் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில் கனடா, அமெரிக்கா ஆகிய மேற்கத்தைய நாடுகளும் பொரளாதாரத் தடை வித்திருக்கின்றன. இவ்வாறானதொரு சூழலில் நடைபெற்ற ஜ-7 மாநாடு சீனப் பொருளாதாரத்தை இலக்கு வைத்தே தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தாலும், அந்த இலக்கை எட்டக்கூடிய அளவுக்கு ஜி-7 நாடுகளிடையே தொடரான ஒத்துழைப்பு இருக்குமா என்பது கேள்வியே.
 
ஏனெனில் ஜி-7 நாடுகளின் செயற்பாடுகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்கும் விவகாரத்திலும் முரண்பாடுகள் இருக்கின்றன. ஜ-7 நாடுகளின் ஆவணங்களைப் பராமரிப்பது யார் என்ற கேள்விகளோடு அமெரிக்கா அதிகளவு நிதியைச் செலவு செய்தால் என்ன என்ற சிந்தனையும் உறுப்பு நாடுகள் மத்தியில் தோன்றியுள்ளன.
 
அது மாத்திரமல்ல ஜ-7 நாடுகளில் அங்கம் வகிக்கும் ஜேர்மனி. பிரான்ஸ். இத்தாலி ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்றன. பிரித்தானிய கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிவிட்டது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தால் சீனாவுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்க வேண்டுமென்ற கருத்தை ஜேர்மனியின் வெளியுறவுச் செயலாளர் மார்க்ஸ் முன்வைத்திருக்கிறார்.
 
ஆகவே சீனாவோடு பொருளாதார உறவை மேற்படுத்த முற்படும் ஜேர்மனி, ஜ-7 நாடுகளின் மாநாட்டில் சீனாவின் பொருளாதாரத்தை முடக்க எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எவ்வளவு தூரம் ஒத்துழைக்கும் என்ற கேள்விகளும் உண்டு.
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆசியான் நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய பொருளாதாரக் கட்டமைப்பு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership- RCEP) ஒன்றைச் சீனா செய்திருந்தது. அந்த ஒப்பந்தத்தில் ஜப்பானும் கைச்சாத்திட்டது.
 
ஆகவே எந்த அடிப்படையில் ஜ-7 மாநாட்டில் சீனாவின் பொருளாதாரத் திட்டங்களை விழுத்த எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஜேர்மனியும் ஜப்பானும் ஒத்துழைக்கும் என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
 
அத்துடன் பிரான்ஸ் ஜனாதிபதி மைக்ரோன் அமெரிக்காவுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்கள்கூட முரணாக இருக்கின்ற நிலையில், ஜி-7 மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் முரண்பாட்டில் ஓர் உடன்பாடு என்று கூறினாலும், வேகமாகத் தனது பொருளாதாரத் திட்டங்களை நகர்த்தி வரும் சீனாவோடு எவ்வளவு காலத்துக்குப் போட்டியிட முடியும் என்பதும் கேள்விதான்.
 
இந்தப் பலவீனங்களை அவதானித்தே ஜ-7 மாநாட்டுத் தீர்மானங்கள் பாதிப்பை ஏற்படுத்தாதென சீனா கூறியிருக்க வேண்டும். ஏழு பணக்கார நாடுகள் சிறிய குழுவாகக் கூடிச் சீனாவை அச்சறுத்த முடியாதென சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் விபரித்திருக்கிறார். தைவான் நீரிணைப் பிரச்சினை சீனாவின் உள் விவகாரம் என்றும் அது பற்றி ஜ-7 நாடுகள் சீனாவுக்குப் போதிக்க வேண்டிய அவசியம் இல்லையெனவும்  அவர் எச்சரித்திருக்கிறார்.
 
நேட்டோ நாடுகளின் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கும் சீனா கண்டனம் வெளியிட்டிருக்கிறது. ஆனால் அந்த மாநாட்டின் தீர்மானங்கள் தொடர்பாக ரஷியா அச்சமடைந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகளிடையே இருக்கக் கூடிய முரண்பாடுகள் பற்றி ரஷயா நன்கு அறிந்திருக்கிறது.
 
2019 ஆம் ஆண்டு நேட்டோ மாநாட்டில் கருத்து வெளியிட்ட பிரானஸ் ஜனாதிபதி இம்மானுவல் மைக்ரோன், மூளை செத்த மனிதனின் உடலைப் போன்றதே நோட்டோ என்று வர்ணித்திருந்தார். ஏனெனில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம். நேட்டோ உறுப்பு நாடுகளைப் புறக்கணித்திருந்தார். துருக்கி நோட்டோவின் கொள்கைக்கு மாறாக இயங்கியது. இந்த நிலையில் நேட்டோவை எப்படிச் செயற்படுத்துவது என்ற கேள்விகள் நேட்டோ அங்கத்துவ நாடுகளிடையே அப்போது எழுந்தன.
 
கடந்த வாரம் கூடிய நோட்டோ மாநாட்டில் ரஷியாவின் உளவுத்துறை அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் ஊடுருவி அந்த நாடுகளின் தேர்தல் முடிவுகள் பற்றிய பொய்யான தகவல்களை வெளியிட்டும் மற்றும் தகவல் தொழில் நுட்ப முறைகளை அறிந்தும் நாசகாரச் செயல்களில் ஈடுபட்டதாகப் பேசப்பட்டிருக்கிறது. அத்துடன் ரஷியாவின் இந்த நாசகாரச் செயல்களைத் தடுப்பது பற்றியும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுமுள்ளன.
 
நேட்டோ நாடுகளுக்கான நிலையில் கட்டளைச் சட்டத்தின் பிரிவு ஐந்தின் பிரகாரம் உறுப்பு நாடொன்றின் மீது வேறு நாடு தாக்குதல் நடத்துமாக இருந்தால் ஏனைய உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எதிரி நாட்டைத் தாக்க வேண்டும்.
 
ஆனால் நோட்டோ உறுப்பு நாடுகள் மத்தியில் அவ்வாறான ஒற்றுமை தொடராக இருக்கிறதா என்ற சந்தேகத்தை பிரான்ஸ் ஜனாதிபதி மைக்ரோன் வெளியிட்டிருக்கிறார். இதுவும் அமெரிக்காவுக்கு விசனத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
 
சீனாவின் இரணுவ வளர்ச்சியும் அதற்கு இசைவான பொருளாதாரத் திட்டங்களும் உலக சமநிலையைக் குழப்புகின்றன என்பதே நேட்டோ மாநாட்டின் முடிவுரையாக இருந்தது. இராணுவச் சமநிலையைப் பேண வேண்டுமானால் சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் பொருளாதார, இராணுவ வளர்ச்சிக்கு ஈடாக ஜ-7 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் மற்றும் நேட்டா நாடுகளும் ஒன்று சேர வேண்டும் என்ற கருத்துக்களும் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
 
 
 
2019 ஆம் ஆண்டு இந்தியாவை நேட்டோ நாடுகளில் சேர்ப்பதற்கான பிரேரணை ஒன்றை அப்போதிருந்த டொனால் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்கக் காங்கிரஸ் பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பித்தது. ஆனால் கடந்த வாரம் இடம்பெற்ற நேட்டோ மாநாட்டில் இந்தியாவைச் சேர்த்துக் கொள்வது பற்றிப் பேசப்படவில்லை.
 
அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் அது பற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசத் தீர்மானித்திருக்கலாம். ஏனெனில் ஜி-7 மாநாட்டில் இந்தியாவுக்கு அதிகளவு நிதி வழங்குவதென எடுக்கப்பட்ட முடிவு அமெரிக்காவினுடையது.
 
ஆகவே சீனாவை மையப்படுத்திய பிராந்திய அடிப்படையிலான பொருளாதார மற்றும் இராணுவச் சமநிலைப் பேணுவதற்கான போட்டியில் இந்தியாவை முன்லைப்படுத்த வேண்டுமென்பது அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்களின் முடிவு. தற்போதுகூட நோட்டோ நாடுகளில் அறிவிக்கப்படாத உறுப்பு நாடாகவே இந்தியா செயற்பட்டும் வருகின்றது.
 
நேட்டோ நாடுகளின் செயற்பாடுகள், முன்மொழிவுகளில் இந்தியாவின் பங்களிப்பு இருப்பதாக நோட்டோ நாடுகளின் தலைவர் ஜோன் ஸ்டோலன்ஸ்பெர்க் ஏலவே கூறியிருக்கிறார்.
 
அன்று சோவியத் யூனியன் நாட்டுக்கு எதிராக நேட்டோ இராணுவ அணி உருவாக்கப்பட்டது போன்று இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பை மையமாக் கொண்டுதான் குவாட் (Dialogue – Quad) Quadrilateral  Security) உருவாக்கப்பட்டது. இதில் இந்தியாவைத் தலைமையாகக் கொண்டு அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்துள்ளன.
 
இதனை உருவாக்கியதும் அமெரிக்கதான். கடந்த ஆண்டு ஜப்பானில் குவாட்  மாநாடு நடைபெற்றது. குவாட் அமைப்பில் இலங்கையை இணைக்கும் ஏற்பாடுகளும் உண்டு.
 
இந்த இடத்திதோன், இந்தியா இலங்கைக்குச் சென்ற புதன்கிழமை நூறு மில்லியன் அமெரிக்க நிதியுதவியை வழங்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கிறது. ஆகவே அமெரிக்கக் காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையில் ஈழத்தமிழர்கள் குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேணை பற்றி ஆனந்தமடைவோர்  இந்த நகர்வு பற்றிச் சிந்திக்கவும் வேண்டும்.
 
ஏனெனில் ஜ-7, நோட்டோ நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், மற்றும் சீனா பற்றிய மென்போக்குகள் இலங்கைக்குச் சாதகமானதே.
 
இந்தியாவை அனைத்துச் செயற்பட வேண்டுமென்ற அமெரிக்கத் தீர்மானத்தோடு, புதுடில்லியைக் கடந்து மேற்குலகம் இலங்கையோடும் நேரடியாக அணுக வேண்டிய நிர்ப்பந்தமும் உருவாகியுள்ளது. இந்தப் பூகோள அரசியலைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் புரிந்து கொண்டதாக இல்லை.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS