விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

உலகைக் காக்குமா கரிம வியாபாரம்?

5 September, 2021, Sun 10:48   |  views: 7162

கடந்த மாதம், சீனா தன்னுடைய தேசிய கரிம சந்தையான, கரிம வெளியீட்டு வர்த்தக அமைப்பைத் (Emissions trading system, ETS) தொடங்கியது. இது, 2060-ம் ஆண்டுக்குள் சீனாவின் கரிம சமநிலையை அடைய உதவுவதோடு, பசுமை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. சுமார் 3,000 ஆற்றல் உற்பத்தி நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளன. கரிம சந்தையில், சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 440 மில்லியன் டன் கரிம வெளியீடு இந்த வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படும். காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில், கரிம வர்த்தகம் ஒரு தீர்வாகச் சொல்லப்பட்டாலும், இது மிகவும் சிக்கலானது என்றும் சூழலியல் ரீதியாகச் சரிப்பட்டுவராதது என்றும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும், பசுமைப் பொருளாதாரத்தில் இது நேர்மறையான தாக்கங்களைக் கொண்டுவரும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 
சராசரியாக, வர்த்தகத்தில், விற்பது, வாங்குவது என்று வந்தால், அது ஒரு குறிப்பிட்ட சரக்கு (அது நிலமாகவோ, பொருளாகவோ, இணையதளமாகவோ, சேவையாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) சார்ந்ததாகவே இருக்க முடியும். ஆனால், கரிம வர்த்தகத்தைப் பொறுத்தவரை, வர்த்தகம் வேறு மாதிரியானது. இங்கு விற்பனை செய்பவர் வாங்குபவருக்கு, அவர் வெளியிடாத கரிம வாயுவை விற்கிறார். இதைத் தத்துவார்த்தரீதியாக இப்படிச் சொல்லாம்.
 
பாவம் செய்யப்போகிறவர் பாவம் செய்யாதவரின் புண்ணியத்தைக் காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறார். அதன்மூலம், செய்யப்போகும் பாவத்தை வாங்கிய புண்ணியம் சமன்படுத்திவிடுகிறது.
 
உலகப் பொருளாதார மன்றத்தின்படி, ஒருவர் கரிம வாயு வெளியீட்டைக் குறைப்பதை பொருளாதார அடிப்படையில் லாபகரமானதாக மாற்றினால், அதற்கு ஊக்கத்தொகை கொடுத்தால், அது பலரையும் கரிம வெளியீட்டு அளவைக் குறைப்பதற்கு ஊக்கப்படுத்தும்.
 
இந்தத் திட்டத்தின் நோக்கம் என்னவோ, கரிம வெளியீட்டைக் குறைப்பதுதான். ஆனால், கரிம வர்த்தகத்தைப் பெருநிறுவனங்கள் ஒருவருக்கொருவர் மாசுபடுத்தும் உரிமையை இந்த வர்த்தகத்தின் மூலம் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. அதாவது, கரிம வெளியீட்டை மேற்கொள்ளும் ஒருவர் இருக்கிறார். தான் வெளியிடக்கூடிய ஒரு டன் கரிம வாயுவை வெளியிடாதவாறு தன் செயல்பாடுகளை மாற்றியமைத்துக் கொண்ட மற்றொருவர் இருக்கிறார். இரண்டாவது நபரிடம் இருந்து அவர் வெளியிடாத அந்த ஒரு டன் கரிமத்தை முதல் நபர் வாங்கிக்கொள்வதன் மூலம், அந்த ஒரு டன் கரிமத்தை அவர் வெளியிட்டுக்கொள்கிறார்.
 
இப்போது இதை அப்படியே நாடுகளுக்குப் பொருத்திப் பார்ப்போம். வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளில் கரிம வெளியீட்டைக் குறைத்துக்கொள்வதற்கு பணம் கொடுக்கிறார்கள். அதன்மூலம், ஒரு வளரும் நாடு வெளியிடாத கரிம அளவை வளர்ந்த நாடு வாங்கிக்கொண்டு, அந்த அளவை அது வெளியிட்டுக்கொள்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பசுமை இல்ல வாயுக்களை வெளியீடு குறைக்கப்படுவதைப் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ள முடிகிறது.
 
கரிம வர்த்தகம் குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள பொருளாதார நிபுணர் ஜவஹரிடம் பேசியபோது, ``இப்போது வளரும் நாடுகளிலிருந்து அதிகளவிலான கரிமம் வெளியாகிறது. வளரும் நாடுகளைவிட அவற்றுக்கு கரிமத் தடம் அதிகமாக இருக்கிறது. இப்படியிருக்கையில் வளர்ந்த நாடுகள், தங்களுடைய பொருளாதாரமே அதைச் சார்ந்திருப்பதால், ஓரளவுக்கு மேல் குறைக்கமுடியவில்லை என்று கூறி, கரிம வெளியீட்டைக் குறைக்க முடிந்த வளரும் நாடுகளிடம் வருகிறார்கள். ஒரு வளரும் நாட்டில், குறிப்பிட்ட அளவு கரிம வாயு குறைக்கப்படுகிறது. அப்படி குறைக்கப்பட்ட கரிம வாயுவை, வளர்ந்த நாடு பணம் கொடுத்து வாங்கிக்கொண்டு அவர்கள் குறைத்ததாகச் சொல்லிக்கொள்கிறார்கள்.
 
உதாரணத்துக்கு, கழிவுகளிலிருந்து மின்சாரம் எடுக்கும் நிலையத்தை தமிழ்நாட்டில் ஒருவர் அமைக்கிறார். அதன்மூலம், இங்கு சுமார் 1,000 டன் கரிம வெளியீட்டைக் குறைக்கிறார். அதற்கு, கரிம வெளியீடு குறைப்பு (Carbon Emission Reduction), என்ற சான்றிதழைப் பெறுகிறார். பிறகு, அவர் குறைத்த அந்த 1,000 டன் கரிமத்தை வேறொருவருக்கு விற்றுவிடுகிறார். ஒரு டன் கரிம வெளியீடு குறைப்பின் விலை சராசரியாக 15 டாலர் (அதிகபட்சமாக 44.80 டாலர் வரை). அவர் குறைத்த கரிம அளவுக்கு சான்றிதழ் பெற்று, உறுதி செய்துவிட்டு, அதை விற்றுவிடுகிறார். இப்படி, கரிம வெளியீடு நிகழாமல் குறைப்பதைப் போலவே, ஏற்கெனவே வளிமண்டலத்தில் இருக்கும் கரிமத்தைப் பிடித்து, நிலத்தில் கரிமத் தன்மயமாக்கலை (Carbon Sequestration) செய்வதன் மூலமும், கரிம வர்த்தகத்தில் ஈடுபட முடியும். எவ்வளவு டன் கரிமத்தை கிரகிக்கிறார்களோ, அதைப் பொறுத்து விலை இருக்கும்.
 
இதில், ஒருவர் வெறுமனே இவ்வளவு டன் கரிம வாயுவைக் குறைத்தேன், இவ்வளவு டன் கரிம வாயுவை வளிமண்டலத் திலிருந்து கிரகித்துக்கொண்டேன் என்று சொல்லிவிட முடியாது. இதை அங்கீகரிக்க, வெரிஃபைட் கார்பன் ஸ்டேண்டர்ட் (Verified Carbon Standard), க்ளைமேட் ஆக்‌ஷன் ரிசர்வ் (Climate Action Reserve) போன்ற சில தன்னிச்சையான அமைப்புகள் இருக்கின்றன. அவர்கள் அங்கீகரித்து கரிம வெளியீடு குறைப்பு சான்றிதழ் கொடுப்பார்கள். அந்தச் சான்றிதழை வைத்து, கரிம வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
 
இதுபோல் கரிம விற்பனையை மேற்கொள்வதை, ஒரு துறையின் கடைசிக் கட்டத்தில் இருப்பவரால்தான் செய்ய முடியும். கழிவுகளில் இருந்து மின்சார உற்பத்தி செய்யும் துறையை எடுத்துக்கொண்டால், ஒருவர் கழிவுகளைச் சேகரிப்பார், அவரிடமிருந்து ஒருவர் வாங்கி அந்தக் கழிவுகளை மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்த ஏதுவான வகையில் மாற்றுவார், பிறகு, அவரிடமிருந்து மின் உற்பத்தி நிறுவனம் வாங்கிப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இங்கு, கழிவுகளைச் சேகரிப்பவரோ, அவற்றை வகைப்படுத்துபவரோ கரிம வெளியீட்டைக் குறைக்கவில்லை, அந்தக் கழிவை வாங்கி மின் உற்பத்தி மேற்கொள்வதன் மூலம், அதிலிருந்து வெளியாகும் கரிமத்தை மின் உற்பத்தியை மேற்கொள்பவர் கட்டுப்படுத்துகிறார். ஆகவே, அவரால்தான் கரிம வர்த்தகத்தில் ஈடுபட முடியும்" என்று கூறினார்.
 
கரிம வர்த்தகம் மூலம் வளர்ந்த நாடுகளோ, பெருநிறுவனங்களோ, அதைக் குறைத்த ஒருவரிடமிருந்து பணம் கொடுத்து வாங்கிக்கொண்டு, எந்த வரையறையுமின்றி வெளியிடுவார்கள் என்றொரு விமர்சனம் வைக்கப்படுவது குறித்துக் கேள்வியெழுப்பியபோது, ``ஒவ்வொரு நாட்டிலுமே கரிம வெளியீட்டை கட்டுக்குள் வைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, ஒருவர் அதிகபட்சமாக 10,000 டன் கரிம வாயுவை வெளியிடலாம், அதற்கு மேல் வெளியிடக் கூடாது என்று கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால், அவர் வெளியிடுவது 12,000 டன். ஆகையால், மீதி 2,000 டன் கரிம வாயு வெளிடுவதற்கு நிகராக, அதே அளவு வெளியீட்டைக் குறைத்தவரிடமிருந்து வாங்கிக்கொள்கிறார்.
 
இதற்கு அவர் கூடுதலாகச் செலவு செய்ய வேண்டும். அப்படியிருக்கையில், ஒரு கட்டத்தில் இதையே தொடர்வதா இல்லை கரிம வெளியீட்டைக் குறைக்கும் வகையில் கட்டமைப்பை மாற்றிக்கொள்வதா என்று சிந்திக்கும் சூழலுக்குத் தள்ளப்படுவார். ஏனெனில், அதே துறையில் இருக்கும் போட்டியாளர்களும் நிலைமைக்கு ஏற்றாற்போல் மாறிக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில், அவர் இதற்கென கூடுதலாகச் செலவழித்துக்கொண்டிருக்க முடியாது. அதனால் அவரும் கரிம வெளியீட்டைக் குறைக்கும் நிலைக்கு மாறும் கட்டாயத்துக்கு வருவார்" என்று கூறினார்.
 
இந்தியாவில் கரிம வர்த்தகம் எந்தளவுக்குப் பரவலாக நடைபெறுகிறது என்பது குறித்துக் கேட்டபோது, ``இந்தியாவில் கரிமத்தைக் குறைப்பவர்கள், அதற்கான சான்றிதழைப் பெற்று வெளிநாடுகளுக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் இன்னமும் கரிம வெளியீட்டைப் பொறுத்தவரை, இவ்வளவுதான் வெளியிட வேண்டும் என்று வழிகாட்டுதல் இருக்கிறதே ஒழிய, கடுமையான கட்டுப்பாடுகள் வரவில்லை. இப்போது கரிம வர்த்தகத்தில், இந்தியாவில் இருப்பவர்கள் வெளிநாடுகளுக்குத்தான் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பிய யூனியனில் அதிகக் கட்டுப்பாடுகள் இருப்பதால், இந்த வர்த்தகம் அங்கிருப்பவர்களோடு அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் இதற்கான சந்தை இதுவரை இல்லை.
 
 எந்த நாட்டில் கரிம வெளியீடு குறித்த கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றனவோ, அங்குதான் கரிம வர்த்தகம் தேவைப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெளியிடக் கூடாது என்று கட்டாயப்படுத்தும்போதுதானே, மீதி வெளியீட்டைக் கணக்கு காட்ட, கரிம வர்த்தகத்தில் ஈடுபடுவார்கள். இந்தியாவில் இன்னமும் அப்படியொரு கட்டாயம் உருவாகாததால், இங்கு கரிம வர்த்தகம் பரவலாகவில்லை. எதிர்காலத்தில், இந்தக் கட்டுப்பாடுகள் வரும்போது இதற்கான சந்தையும் உருவாகலாம்" என்று கூறினார்.
 
கரிம வர்த்தகம் மூலம் கரிம வெளியீட்டைக் கட்டுப்படுத்த முயல்வதோடு, அதை ஒரு பொருளாதார வாய்ப்பாகவும் பார்க்க முடிகிறது. உலக அளவிலும்கூட, அது இன்னும் பரவலாகவில்லை. சீனா, ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் என்று சில வளர்ந்த நாடுகளே இதில் ஈடுபடுகின்றன. அங்கெல்லாம் இருப்பதைப் போன்ற பசுமைக் குடில் வாயு வெளியீட்டுக்கான கட்டுப்பாடுகள் உலக அளவில் பரவலாக விதிக்கப்படும்போது, இதுவும் பரவலாகும். அதன் பிறகே இதன்மூலம் கிடைக்கும் பலன்களை நம்மால் நேரடியாகக் காண முடியும்.
 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18