விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

சிக்கன் பொரியல் சாப்பிட்டுருக்கீங்களா?

15 September, 2021, Wed 15:14   |  views: 7804

 பொதுவாக நாம் அனைவரும் பொரியல் என்றால் காய்காறியில் மட்டுமே செய்து சாப்பிடுவோம். ஆனால் சிக்கன் மற்றும் மட்டனில் நன்றாக வதக்கிய வெங்காயமும் தேங்காய் துருவலும் போட்டு பொரியல் செய்தால் எப்படி இருக்கும் தெரியுமா.... வாங்க எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்...

 
 
தேவையான பொருட்கள் :
 
உப்பு - சிறிதளவு
 
சிக்கன் - தோல்நீக்கியது.
 
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
 
கடுகு - 1 தேக்கரண்டி
 
கறிவேப்பிலை - சிறிதளவு
 
கொத்தமல்லி - சிறிதளவு
 
வெங்காயம் - 1
 
மஞ்சள் தூள் - சிறிது
 
தேங்காய் துருவல் - அரை கப்
 
மிளகு - 1 தேக்கரண்டி
 
வெங்காயம் - 1
 
காய்ந்த மிளகாய் - 1
 
பூண்டு - 6 பல்
 
செய்முறை :
 
முதலில்  வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். சிக்கனை வேகவைத்து எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். அதன் பின்னர் மிக்சியில் காய்ந்த மிளகாய், மிளகு, பூண்டு, தேங்காய் துருவல், வெங்காயம் போட்டு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்கு அரைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து அரைத்த மசாலாவை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
 
 
மசாலா கொதிக்க ஆரம்பித்தவுடன் வேக வைத்த சிக்கனை அதில் போட்டு கலந்து உப்பு, தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி சிக்கனுடன் ஊற்றவும். பின் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இப்போது  சுவையான சிக்கன் பொரியல் ரெடி. 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

சேமியா இட்லி

24 January, 2023, Tue 14:11   |  views: 944

ப்ரோக்கோலி பொரியல்

22 January, 2023, Sun 5:34   |  views: 1262

மசால் வடை

14 January, 2023, Sat 3:53   |  views: 2716

அவல் பொங்கல்

11 January, 2023, Wed 13:27   |  views: 2748

கோவில் பிரசாத சுவையில் சர்க்கரை பொங்கல்

6 January, 2023, Fri 16:27   |  views: 3339
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18