விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு (3)

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு (2)

வேலை வாய்ப்பு (3)

வேலை வாய்ப்பு

Bail விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

வேலை வாய்ப்பு

D.S.A வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

நிகழ்வு சேவைகள்

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

வீடு விற்பனைக்கு

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

தோனியை பாராட்டி பதிவிட்ட ட்வீட்டை டெலிட் செய்துவிட்டு மீண்டும் பதிவிட்ட விராட் கோலி!

11 October, 2021, Mon 10:13   |  views: 736

 தோனியை பாராட்டி பதிவிட்ட ட்வீட்டை அந்த ஒரு வார்த்தைக்காக டெலிட் செய்துவிட்டு மீண்டும் பதிவிட்ட கேப்டன் விராட் கோலியின்.

 
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் ப்ளே ஆஃப் (அரையிறுதி) சுற்று நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
 
அதன்படி, மிகவும் எதிர்பார்ப்புடன் முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. இதில், அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 60 ரன்களும், ரிஷப் பந்த் 51 ரன்களும், ஹெட்மயர் 37 ரன்களும் எடுத்தனர். சென்னை பந்துவீச்சை பொறுத்தளவில் ஜோஸ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, பிராவோ, மொயின் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டு எடுத்தனர்.
 
இதனைத்தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஒருவரான டு பிளசிஸ், அன்ரிச் நார்ட்ஜே முதல் ஓவரிலேயே போல்டாகி பெரும் அதிர்ச்சியை அளித்தார். இதன்பின் களமிறங்கிய ராபின் உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி கலந்த நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
 
இதில், ருதுராஜ் கெய்க்வாட் 70 ரன்களும், ராபின் உத்தப்பா 63 ரன்களும் எடுத்தனர். ஷர்துல், அம்பட்டி ராயுடு சொற்ப ரன்களில் வெளியேறினர். கடைசி 6 பந்துகளில் 13 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்னை அணி இருந்த நிலையில், அப்போது கேப்டன் தோனி மற்றும் ஆல்ரவுண்டர் மொயின் அலி களத்தில் இருந்தனர்.
 
கடைசி ஓவரை டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் டாம் கர்ரன் வீசினார். முதல் பந்திலேயே மொயின் அலி அவுட்டாக, ஜடேஜாவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். இறுதி ஓவரில் 5 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை அடித்தார். இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.
 
பாமில் இல்லாத தோனி யாரும் எதிர்பார்காத நேரத்தில் களமிறங்கி கடைசி ஓவரில் அபாரமாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்து என்னால் முடியும் என்று மீண்டும் நிரூபித்தார். தோனியின் இந்த அபாரமான பினிஷிங்கால் முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
 
அந்தவகையில், சர்ப்ரைஸாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கேப்டன் விராட் கோலி, தோனியை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
 
அதில், தி கிங் மீண்டும் வந்துவிட்டார். கிரிக்கெட்டில் மிக சிறந்த ஃபினிஷர் அவர் தான். என் இருக்கையை விட்டு மீண்டும் ஒருமுறை இன்று துள்ளிக் குதித்தேன் என பதிவிட்டிருந்தார். ஆனால், சில நொடிகளிலேயே இதனை டெலிட் செய்த கோலி, 'Ever' என்ற வார்த்தையை சேர்த்து மீண்டும் பதிவிட்டார்.
 
முதலில் பதிவிட்ட பதிவில், இந்த விளையாட்டில் சிறந்த ஃபினிஷர் அவர்தான் என இருந்தது. Ever என்ற இந்த வார்த்தை சேர்த்ததும், இந்த விளையாட்டில் 'எப்போதும்' சிறந்த ஃபினிஷர் தோனிதான் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் அந்த அளவிற்கு தோனியின் மீது விராட் கோலி மரியாதை வைத்துள்ளார் என்பது தெரிகிறது.

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


tanjore-ponni-boiled-rice-france
தரமான No.1 தஞ்சாவூர் பொன்னி புழுங்கல் அரிசி
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி