எழுத்துரு விளம்பரம் - Text Pub

நியூசிலாந்து அணி அபாரம் - இந்தியா தடுமாற்றம்

28 November, 2021, Sun 9:32   |  views: 8048

இந்தியா - நியூசிலாந்து (India vs New Zealand) அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 345 ரன்களும், நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கும் ஆல்அவுட்டாகினர். 

 
இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் அபாரமாக விளையாடி, அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தினார். நியூசிலாந்து அணியும் முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 
 
தொடக்க ஆட்டக்காரர்களான வில் யங் மற்றும் டாம் லாதம் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களது விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய அணி திணறியது.
 
தொடக்க விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்ந்திருந்தபோது, அவர்களின் பார்ட்னர்ஷிப்பை அஸ்வின் (Ravichandran Ashwin) பிரித்தார். அதன்பிறகு இந்திய அணியின் கை ஓங்கியது. மிடில் ஆர்டர்கள் மற்றும் பின்வரிசை வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடாததால் அந்த அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. 
 
இறுதியில் அந்த அணி 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 49 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. சுப்மான் கில் ஒரு ரன்னுக்கு போல்டாகி வெளியேறினார். அற்புதமாக பந்துவீசி அவரது விக்கெட்டை ஜேமிசன் கைப்பற்றினார். இத்துடன் 3வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், 4வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
 
காலையில் ஆட்டம் தொடங்கிய முதலே இந்திய அணி தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. முன்னணி வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறி வருகின்றனர். மயங்க் அகர்வால் 17 ரன்னுக்கும், புஜாரா 22 ரன்னுக்கும், ரகானே 4 ரன்களுக்கும் அவுட்டாகினர். 
 
இதனால், 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி விளையாடி வருகிறது. ஸ்ரேயாஸ் அய்யரும், அஷ்வினும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரை இந்திய அணி 133 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. தற்போது வரை நெருக்கடியில் இருக்கும் இந்திய அணி மீளுமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18