எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஜோகோவிச் விசா 2வது முறையாக இரத்து- உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

15 January, 2022, Sat 12:04   |  views: 7971

ஆஸ்திரேலியாவில் வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியன் ஒப்பன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க இரு தவணை கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம். அத்துடன் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்திரேலியா வந்துள்ள வீரர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

 
இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) செலுத்தாத காரணத்தினால் இந்த போட்டியில் பங்கேற்க வந்த உலகின் நம்பர் 1 டென்னஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சினுக்கு (Novak Djokovic) அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன் அவர் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை எனவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அவரின் விசாவையும் ஆஸ்திரேலியா அரசு அதிரடியாக ரத்து செய்தது. 
இதனையடுத்து நோவாக் ஜோகோவிச் விசாவை ரத்து செய்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில் தனக்கு உடல் ரீதியான பிரச்சனை இருப்பதாலும், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதனால்தான் தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றும் நோவாக் ஜோகோவிச் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். 
 
மறுபுறம் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது., கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு தற்போது ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாக அறிவித்துள்ளோம். இந்த அறிவிப்பை  ஜோகோவிச் மீறியுள்ளதாகவும், பொய்யான தகவலைக்காட்டி ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த விவாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசின் முடிவை ரத்து செய்ததுடன் தீர்ப்பு வெளியான 30 நிமிடங்களில் தடுப்பு காவல் மையத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. 
 
இதற்கிடையில் மீண்டும் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்தார் குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹாாவ்கே. இதனால் தற்போது 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செர்பியன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓப்பனில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தன்னுடைய விசாவை 2 முறை ரத்து செய்தது தொடர்பாக தற்போது நோவாக் ஜோகோவிச் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். மறுபுறம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிடில் நாட்டில் அனுமதி மறுக்கப்படும் என்று ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியா ஒபன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பரா என்பது சந்தேகமாகவே உள்ளது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18