எழுத்துரு விளம்பரம் - Text Pub

இந்திய அணியில் 6 கேப்டன்கள் - பயிற்சியாளர் ராகுல் டிராவிட்

21 June, 2022, Tue 13:41   |  views: 7954

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு ராகுல் டிராவிட் டீம் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.  ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் இந்திய அணி நியூசிலாந்து, இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தொடரை வென்றது.  அதே நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 2-2 என சமன் செய்தது.  5வது மற்றும் இறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இருப்பினும், இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தபோது ஏமாற்றம் அளித்தது. 

 
பெங்களூரில் ஐந்தாவது டி20 தொடங்குவதற்கு முன், டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அனுபவம் பற்றி பேசினார்.  "இது மிகவும் உற்சாகமாக மற்றும் நல்ல வேடிக்கையாக இருந்தது. இந்த பயணம் சவாலானது, நான் பணியாற்ற கடந்த எட்டு மாதங்களில் ஆறு கேப்டன்கள் உருவாகி உள்ளனர். கொரோனா தொற்று பல போட்டிகளுக்கு தடையாக இருந்தது.  அணியை நிர்வகிப்பது, வீரர்களின் பணிச்சுமையை நிர்வகித்தல் மற்றும் கேப்டன்சியில் சில மாற்றங்கள் ஆகியவை உங்களுக்குத் தெரியும், எனவே நான் சிலருடன் பணியாற்ற வேண்டியிருந்தது.
 
எனக்கு அடுத்தகட்ட கேப்டன்களை உருவாக்கும் பொறுப்பும், வாய்ப்பும் கிடைத்துள்ளன. ஒரு அணியாக, நாங்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்கிறோம், மேலும் கடந்த 8-10 மாதங்களில் அதிகமான புது வீரர்களை உருவாக்கும் முயற்சி செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளோம், இது சிறப்பாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். கடந்த 8 மாதங்களில் நான் திரும்பிப் பார்த்தால், தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரைப் பொறுத்தவரையில் ஏமாற்றத்தையே அளித்தது" என்று கூறினார்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18