விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

தமிழகத்தில் நிரம்பி ததும்பும் அணைகள்: ஆறுகளில் கரைபுரளும் வெள்ளம்

4 August, 2022, Thu 9:03   |  views: 1410

 தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

 
 
 
நீலகிரியில் மழை கொட்டுது
 
 
நீலகிரியில், இரண்டாவது ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை, 8:00 மணி நிலவரப்படி, ஓவேலி, 59 மி.மீ., கூடலூர், 49 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. சராசரியாக, 15.95 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. ரெட் அலர்டையொட்டி இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காலை முதல் மழை தொடர்வதால், மலை காய்கறி, தேயிலை தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
 
 
 
அணைகளில் நீர்மட்டம் உயர்வு
 
 
மாவட்ட முழுவதும், 13 அணைகள், 30க்கு மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன. தென் மேற்கு பருவ மழையால் குந்தா, கெத்தை, மாயார் உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியது, பிற அணைகள், 80 சதவீதம் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மழை பாதிப்பு பகுதிகளை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார், கலெக்டர் அம்ரித், உட்பட அரசுத்துறை அலுவலர்கள் மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டனர்.
 
 
 
 
ஆழியாறு அணை
 
 
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணை நீர்மட்டம் 116 அடியை எட்டியது. இதனால், அணைக்கு வரும் 2,125 கன அடி நீர் முழுவதும் 9 மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மேட்டூர் அணை
 
 
காவிரியின் நீர்பிடிப்பு மற்றும் மேட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1,85,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120. 23 அடியாக உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுரங்க மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி நீரும், 1,77,000 கன அடி நீரும் வந்து கொண்டுள்ளது.
 
அதிகளவில் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், மேட்டூர் சங்கிலி முனியப்பன் கோவில் அருகே மேட்டூர் எடப்பாடி சாலையில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள், அலுவலகம் செல்வோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த்துறையினர், நீர்வளத்துறை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
 
 
 
 
வைகை அணை
 
தேனி மாவட்டம் வைகை அணை நிரம்பியதை தொடர்ந்து, அணைக்கு வரும் 2,400 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
 
 
 
 
பரிசல் இயக்க தடை
 
கர்நாடகாவில் காவிரியாற்றில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால், தமிழக எல்லையான பிலி குண்டுலுவுக்கு தற்போது 1,75,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 25 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.இதனிடையே, கர்நாடக அணைகளில் காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 83 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து 68,100 கன அடியும், கபினி அணையில் 15 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
 
 
குற்றாலத்தில் குளிக்க தடை
 
 
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 4வது நாளாக தொடர்கிறது.
ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 8.70 அடியும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 14.93 அடியும் உயர்ந்துள்ளது.
 
 
 
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
 
 
 
 
 
பாபநாசம்
 
உச்சநீர்மட்டம் : 143 அடிநீர் இருப்பு : 84அடிநீர் வரத்து : 7733.33 கன அடி வெளியேற்றம் : 1004.75கன அடி
 
 
 
சேர்வலாறு :
 
உச்சநீர்மட்டம் : 156 அடி நீர் இருப்பு : 117.78 அடி நீர்வரத்து : இல்லைவெளியேற்றம் : இல்லை
 
 
 
மணிமுத்தாறு :
 
உச்சநீர்மட்டம்: 118நீர் இருப்பு : 73.15 அடி நீர் வரத்து : 139கனஅடி வெளியேற்றம் : 55 கன அடி
 
 
வடக்கு பச்சையாறு:
 
உச்சநீர்மட்டம்: 50அடிநீர் இருப்பு: 8.75அடிநீர் வரத்து: இல்லைவெளியேற்றம்: 10 கன அடி
 
 
 
நம்பியாறு:
 
உச்சநீர்மட்டம்: 22.96 அடிநீர் இருப்பு: 12.49 அடிநீர்வரத்து: இல்லைவெளியேற்றம்: இல்லை
 
 
 
கொடுமுடியாறு:
 
உச்சநீர்மட்டம்: 52.25 அடி நீர் இருப்பு: 42 அடிநீர்வரத்து: இல்லைவெளியேற்றம்: 2 கன அடி
 
 
 
மழை அளவு:
 
பாபநாசம்:15 மி.மீசேர்வலாறு :6 மி.மீமணிமுத்தாறு:7.2 மி.மீஅம்பாசமுத்திரம்:4 மி.மீசேரன்மகாதேவி:4.4 மி.மீகளக்காடு :1.2 மி.மீபாளையங்கோட்டை:4 மி.மீநெல்லை:4.6 மி.மீ
 
 
 
 
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
 
 
 
 
 
கடனா :
 
உச்சநீர்மட்டம் : 85 அடிநீர் இருப்பு : 74அடிநீர் வரத்து : 488கன அடிவெளியேற்றம் : 60 கன அடி
 
 
 
ராமா நதி :
 
உச்ச நீர்மட்டம் : 84 அடி நீர் இருப்பு : 82 அடிநீர்வரத்து : 131 கன அடிவெளியேற்றம் : 60 கன அடி
 
 
 
கருப்பா நதி :
 
உச்சநீர்மட்டம்: 72 அடிநீர் இருப்பு : 48.89 அடி நீர் வரத்து : 35 கன அடிவெளியேற்றம் : 5 கன அடி
 
 
 
குண்டாறு:
 
உச்சநீர்மட்டம்: 36.10 அடிநீர் இருப்பு: 36.10 அடி நீர் வரத்து: 135 கன அடிவெளியேற்றம்: 135 கன அடி
 
 
 
அடவிநயினார்:
 
உச்ச நீர்மட்டம்: 132.22 அடிநீர் இருப்பு: 103 அடிநீர் வரத்து :165 கன அடிநீர் வெளியேற்றம்: 5 கன அடி
 
 
 
மழை அளவு :
 
கடனா : 18 மி.மீராமா நதி : 6 மி.மீகருப்பா நதி :12 மி.மீகுண்டாறு :62 மி.மீஅடவிநயினார் :31 மி.மீஆய்குடி :2 மி.மீசெங்கோட்டை:7 மி.மீதென்காசி :4 மி.மீசிவகிரி :3 மி.மீ
பல அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளிலும் நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18